பள்ளி செல்லுவோம்

பள்ளி

பள்ளி செல்லுவோம்

பள்ளி செல்லுவோம்

படிப்போடு பண்பாடும் தரும்

பள்ளி செல்லுவோம்

 

துள்ளி செல்லுவோம்

துள்ளி செல்லுவோம்

துடிப்போடு துவளாமல் தினந்தினம்

துள்ளி செல்லுவோம் Continue reading “பள்ளி செல்லுவோம்”

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.

ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.

மணிதான் தலைவர்.

தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.

சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.

கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர். Continue reading “ரசிகர் மன்றம்”

ஆரத்தி தட்டு புகைப்படங்கள்

ஆரத்தி தட்டுகள்

தமிழ் நாட்டில் திருமண விழாவின்போது, மாப்பிள்ளையை ஆரத்தி எடுத்து வரவேற்பது வழக்கம்.

திருமணத்திற்கான முன்னேற்பாடுகளில் கலை நயம் மிகுந்த ஆரத்தி தட்டுகள் செயவது ஒரு தனித்திறமை.

அழகான இந்த ஆரத்தி தட்டுகள் மணவிழாவை மகிமைப் படுத்துகின்றன. Continue reading “ஆரத்தி தட்டு புகைப்படங்கள்”

தயிர் சாதம் செய்வது எப்படி?

சுவையான தயிர் சாதம்

தயிர் சாதம் பெரும்பாலோனோருக்குப் பிடித்த அருமையான உணவாகும்.

இது உடனடி உணவாகவும், குழந்தைகளுக்கு மதிய வேளை உணவாகவும், வெளியூர் பயணங்களுக்கு கொண்டு செல்லும் உணவாகவும் பயன்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கண்ணனுக்கு இது தயார் செய்யப்பட்டு படைக்கப்படுகிறது.

இது தனியாகவோ, ஏனைய கலவை சாதங்களான புளியோதரை சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் ஆகியவற்றுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது.

இனி எளிய வகையில் சுவையான தயிர் சாதம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தயிர் சாதம் செய்வது எப்படி?”

யார் சீடன்? – சிறுகதை

யார் சீடன்

யார் சீடன் என்பது ஒரு நல்ல கதை. வாழ்வினை எப்படி அணுக வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அருமையான கதை. படியுங்கள்! பயன் பெறுங்கள்!

கரும்பையூர் என்ற ஊரில் சோமு, பாபு, கோபு என்ற நண்பர்கள் மூவர் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்களுக்குக் குரு ஒருவரைத் தேர்வு செய்து அவரிடம் வாழ்க்கைக் கல்வி கற்க விரும்பினர்.

யாரிடம் கல்வி கற்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தருப்பையூருக்கு அருகில் சம்பு என்றொரு சாது, ஆசிரம் அமைத்து வாழ்க்கைக் கல்வி கற்பிப்பதை கேள்வியுற்றனர். Continue reading “யார் சீடன்? – சிறுகதை”