நாலு கோடி பாடல்கள்

நாலு கோடி பாடல்கள்

நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் – இது அரச கட்டளை.

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து இவ்வாறு ஆணையிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ அவைக்களப் புலவர்கள் திகைத்தனர்.

அப்போது அங்கே ஒளவையார் வந்தார்.  புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார்.

உடனே அவர் அவைக்களப் புலவர்களைப் பார்த்து, “இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம்.” என்றார். Continue reading “நாலு கோடி பாடல்கள்”

தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை

தேங்காய் பால் கொழுக்கட்டை மாலை நேரத்தில் உண்பதற்கு ஏற்ற சிற்றுண்டி ஆகும். இதனை சுவையாக எளிய முறையில் வீட்டில் செய்து அசத்தலாம்.

மழை காலங்களில் இதனை இதமான சூட்டில் உண்ண சளித் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.

இனி தேங்காய்ப்பால் கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

நம்மில் பலர் நாம் வகிக்கும் பதவியினால் நமக்கு பெருமை என்று எண்ணுகிறோம். பதவியால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம், அது எல்லாவற்றையும் வழங்கி விடும் என்று தவறாகக் கருதுகிறோம்.

அவ்வாறு சுயாங்கோ என்பவர் மேயர் பதவியில் இருந்தபோது, துறவி ஒருவரைக் காணச் சென்றார். அப்போது நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்”