கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

‘கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு’ என்ற பாடல் கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் எட்டாவது பாசுரம் ஆகும்.

பாவை நோன்பின் போது கண்ணனின் வீரச்செயல்களைப் புகழ்ந்து பாடினால் அவன் நமக்கு விரும்பிய பலனைத் தருவான்.

விடிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கண்ணனின் புகழினைப் பாட உன்னுடைய உறக்கத்தை கலைத்து விட்டு வா என்று தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை அழைக்கும் பாசுரம் அழைக்கும் பாசுரம். Continue reading “கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு”

கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்!

கேலியைப் பொருட்படுத்தாதீர் முன்னேறுவீர்

கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்! –
இதுவே, நாம் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய மந்திரம்.

நாம் ஒரு செயலைச் செய்தால் பிறர் நம்மைக் கேலி செய்வார்களோ, கிண்டல் அடிப்பார்களோ என்றே நம்மில் பலர் தயங்குகிறோம்.

சில நேரங்களில் செயல்களைச் செய்கின்றோம். பலநேரங்களில் யோசித்து தயங்கி, செய்யும் செயல்களை செவ்வனே முடிக்காமல் திணறுகிறோம்.

பிறர் கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்! என்பதை நமது இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

அது எவ்வாறு என்பதை ஒரு சிறு கதையின் மூலம் பார்ப்போம். Continue reading “கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்!”

குதிகால் வலி குறைக்கும் வழி

குதிகால் வலி குறைக்கும் வழி

பூனை நடை நடந்து புன்சிரித்து மேடையில் வலம் வரும் மாடல்களைப் பார்த்து உயரமான குதிங்கால் செருப்பு அணிந்து ஒய்யார நடை நடக்க விரும்பும் யுவதியா நீங்கள்?

அப்படியானால் உங்களுக்கும், இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இன்றைக்கு ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களுள் முன்னிலையில் இருப்பது குதிகால் வலி. Continue reading “குதிகால் வலி குறைக்கும் வழி”

வெந்தயக் கீரை பொரியல் செய்வது எப்படி?

வெந்தயக் கீரை பொரியல்

வெந்தயக் கீரை பொரியல் என்பது சுவையான மற்றும் ஆரோக்கியமான தொட்டுக்கறி ஆகும்.

லேசான கசப்பு சுவையை உடைய இக்கீரையை எவ்வாறு எளிய முறையில் சுவையாக சமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “வெந்தயக் கீரை பொரியல் செய்வது எப்படி?”