கருப்புக் கண்ணாடி – அறிவியல் குறுங்கதை

கருப்புக் கண்ணாடி

அன்றைய தினம் கல்லூரி ஒன்றில் ’அறிவியல் மாநாடு’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு அறிவியல் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்த அம்மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஆசிரியர் வேதிவாசனும் அழைக்கப்பட்டிருந்தார். Continue reading “கருப்புக் கண்ணாடி – அறிவியல் குறுங்கதை”

ஏலக்காய் – மசாலாக்களின் ராணி

ஏலக்காய் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மணம் ஆகும்.

உலகில் உள்ள விலை உயர்ந்த மசாலாப் பொருட்களில் இது வெண்ணிலா மற்றும் குங்குமப்பூவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இது நம் நாட்டில் பராம்பரியமாக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இது வெறும் வாயில் போட்டு மெல்லப்படும் இயற்கை சுவாசப் புத்துணர்வுப் பொருளாகவும் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “ஏலக்காய் – மசாலாக்களின் ராணி”

கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காய் குழம்பு நாவிற்கு ருசியாகவும், மணமாகவும் உள்ள குழம்பு வகையாகும்.

கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

கத்தரிக்காய் பற்றி மேலும் அறிய இதை சொடுக்கவும்.

இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இனி எளிய வகையில் கத்தரிக்காய் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?”

கனவில் மிதந்தால் – ஒரு நல்ல கதை

கனவில் மிதந்தால்

கனவில் மிதந்தால் என்ற கதை, ஒருவன் உழைக்காமல் வெறுமனே கனவு கண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சுப்பன் ஓர் ஏழை. அவன் மட்பாண்டங்களை செய்து விற்கும் தொழிலைச் செய்து வந்தான். சுப்பனுக்கு நீண்ட நாட்களாக பணக்காரனாக வேண்டும் என்ற‌ ஆசை இருந்தது.

தான் பணக்காரனால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பான்.

Continue reading “கனவில் மிதந்தால் – ஒரு நல்ல கதை”