பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு

காதல்

பிப்ரவரி 14 என்றதும் காதலர் தினம் என்று அனைவரும் புளகாங்கிதம் அடையும் வேளையில், ஒரு காதல் கொண்ட பெண்ணின் மனது எப்படி இருக்கும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.

காதலன் முதலில் பாட, அதற்குக் காதலி பதில் சொல்லும் வகையில் அமைந்த இந்தக் கவிதை எல்லாக் காதலர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை.

 

அம்மாடி உன் பார்வை பட்டா போதும்

ஆயுசு நூறு என்றே மாறிப் போகும்

சும்மாயில்ல மூத்தவங்க சொன்ன பேச்சும்

சுட்டுடத்தான் செய்யுதடி காதல் மூச்சும் Continue reading “பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு”

மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி பலன்கள்

மிதிவண்டிப் பயிற்சி

மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு தரும் மிக எளிய பயிற்சி.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் மனிதனும் தன் தேவைகளுக்காக ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கிறான்.

அவன் தனது உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல், உடல்நலம் கெட்டும், மனஉளைச்சலுக்கு ஆளாகியும் காலம் தள்ள வேண்டிய சூழலே தற்போது நிலவுகிறது . Continue reading “மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி பலன்கள்”

பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்

பறவைகளின் அலகுகள்

பறவைகளின் அலகுகள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. பறவைகளின் அலகுகள் பல வகை. அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பறவைகளுக்கு பொதுவாக பற்கள் காணப்படுவதில்லை. அவைகள் தங்களின் அலகுகளாலே உணவினை உண்கின்றன. வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான அலகுகளைக் கொண்டுள்ளன. Continue reading “பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்”

வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான வறுத்த அரிசிக் கொழுக்கட்டை

வறுத்த அரிசிக் கொழுக்கட்டை வையானது, மணமிக்கது. இதனை எளிதில் தயார் செய்யலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை நொறுக்குத் தீனியாகவும், மாலை நேரச் சிற்றுண்டியாகவும் இதனைச் செய்து கொடுக்கலாம். Continue reading “வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்சு இழுக்கும் கண்மணி – என்

கரும்பு மனச புரிஞ்சுக்கிட முடியாத‌ பொண்ணு நீ

எண்ணத்துல நீ முழுக்க இருப்பதுதான் உண்மையடி – இங்க

எதுதான் உன்னை தடுக்குதுன்னு உடனடியா சொல்லுடி Continue reading “கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி”