புத்திசாலி தவளை

தவளை

புத்திசாலி தவளை என்பது சீன தேசக் குட்டிக் கதையாகும்.

முகில்வனம் என்றொரு காடு இருந்தது. அதில் தங்கப்பன் என்ற பெரிய தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் சாமர்த்தியமானது.

ஒரு முறை புலி புண்ணியகோடி தவளை தங்கப்பனைப் பார்த்தது. புலி புண்ணியகோடி அதற்கு முன்னர் அவ்வளவு பெரிய தவளையைப் பார்த்து இல்லை. எனவே தவளை தங்கப்பனைப் பார்த்து “நீ யார்?” என்று புலி புண்ணியகோடி கேட்டது.

அதற்கு தவளை தங்கப்பன் “நான் தவளைகளின் அரசன். எனது பெயர் தங்கப்பன். நான் பல அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.” என்று கூறியது. Continue reading “புத்திசாலி தவளை”

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் சொக்கநாதர் ஏழையான தருமிக்காக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு பாடல் எழுதி பொற்கிழி அளிக்கச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

பாண்டியனின் சந்தேகம், தருமியின் வேண்டுகோள், இறைவனார் தருமிக்காக பாடல் கொடுத்தது, நக்கீரர் இறைவன் என்றறிந்தும் இறைவனாரின் பாடலைக் குறை கூறியது, இறைவனார் நக்கீரரை எரித்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து இரண்டாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்”

சில்வர் பாத்திரம் – அறிவியல் குறுங்கதை

சில்வர் பாத்திரம்

அன்றுதான், காலாண்டு தேர்வுத் விடுமுறை தொடங்கிற்று. விடுமுறை தொடங்கிய முதல் ஓரிரு நாட்களிலேயே, தனது வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தி முடித்து விடுவது, ஆசிரியர் வேதிவாசனின் வழக்கம்.  Continue reading “சில்வர் பாத்திரம் – அறிவியல் குறுங்கதை”

இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?

இலக்கியம்

இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டுமே உணரக் கூடிய ஓர் இன்பம். இலக்கியங்களை நாம் வாசிப்பதும் அசை போடுவதும் நம் மனதைப் பண்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.

இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாட்களில் பட்டு, அறிந்து, கண்டு வைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும். Continue reading “இலக்கிய இன்பம் எப்படிப்பட்டது?”

மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுவது ஏன்?

மஞ்சள்

மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

 

மஞ்சள் ஒரு

மங்கலப் பொருள்

மசாலாப் பொருள்

மூலிகைப் பொருள்

அழகுசாதனப் பொருள்

 

இது நம்முடைய நாட்டில் பாராம்பரியமாக நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Continue reading “மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுவது ஏன்?”