புதிர் கணக்கு – 22

“நண்பர்களே, இப்போது இரண்டாவது புதிரை நமது காக்கை கருப்பன் கேட்கப்போகிறது. நீங்களும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். பதில்களை அவர்கள் கூறாவிட்டால் நீங்களும் கூறலாம். உங்களுக்கும் அந்த அடிப்படையில் பரிசுகள் கிடைக்கும்” என்று கூறிவிட்டு கழுகு கரிகாலன் அமர்ந்தது. “இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியது பருந்து பாப்பாத்தி.

புதிர் கணக்கு – 21

மறுநாள் பொழுது புலர்ந்தது. அந்தக் குளத்தங்கரையில் நின்றிருந்த குட்டையான மரங்களின் மீது வெளிநாட்டு உள்நாட்டுப் பறவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நின்று கொண்டிருந்தன. “இன்று புதிர் போட்டியைத் தொடக்கி வைக்க வேண்டுமல்லவா? நமது தலைவரான கழுகு கரிகாலன் தனது புதிரை முதலாவதாகச் சொல்லி இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க வேண்டுமென உங்கள் அனைவரின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றது காக்கை கருப்பன்.

காட்டுக்குள் தீபாவளி

நாட்டுக்குள்ள தீபாவளி நாளு வருதாம் – அதில் நம்மளோட பேரெல்லாம் சேர்ந்து வருதாம் வேட்டைக்கார நரிவந்து சொல்லி போச்சுதென – அந்த வேங்கை மகன் வரிப்புலி சொல்லி சிரிச்சான்

ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்

அந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர ஆரம்பித்தன. அங்கு ஏற்கனவே இருந்த பறவைகளுக்கு இவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை.