காத்திருக்கும் பா(ர்)வை

வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம் கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம் சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம் கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம்

தாய்

கரம்பிடித்து நடைபயில விரல் தந்தாயே – நான் கால்களிலே நிற்பதற்கு துணை வந்தாயே விரல்பிடித்து எழுதிடஉன் முகம் கொடுத்தாயே – நான் வெற்றி நடைபயில உன்முகம் மலர்ந்தாயே