• நன்னாரி – மருத்துவ பயன்கள்

    நன்னாரி – மருத்துவ பயன்கள்

    நன்னாரி வேர் இனிப்பும், சிறு கசப்பும் சேர்ந்த சுவையானது. குளிர்ச்சியான தன்மை கொண்டது. வியர்வை, சிறுநீர் ஆகியவற்றைப் பெருக்கும்; தாது வெப்பத்தை அகற்றும்; உடலைத் தேற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; வண்டு கடி, நீரழிவு, கிரந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் குணமாக்கும். (மேலும்…)

  • நந்தியாவட்டை – மருத்துவ பயன்கள்

    நந்தியாவட்டை – மருத்துவ பயன்கள்

    நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.

    (மேலும்…)

  • தும்பை – மருத்துவ பயன்கள்

    தும்பை – மருத்துவ பயன்கள்

    தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும்.

    (மேலும்…)

  • துத்தி – மருத்துவ பயன்கள்

    துத்தி – மருத்துவ பயன்கள்

    துத்தி பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். (மேலும்…)

  • ஜாதிக்காய் – மருத்துவ பயன்கள்

    ஜாதிக்காய் – மருத்துவ பயன்கள்

    ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.

    (மேலும்…)