• கருப்பட்டி இடியாப்பம் செய்வது எப்படி?

    கருப்பட்டி இடியாப்பம் செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி : 600 மி.லி. (இடித்து அவித்து சல்லடையில் சலித்து வைக்கவும்)
    கருப்பட்டி : ¼ கிலோ
    தண்ணீர் : 400 மி.லி. அல்லது 2 டம்ளர்

     

    செய்முறை

    கருப்பட்டியைத் தட்டிப்போட்டு தண்ணீர் விட்டு கருப்பட்டி கரைந்து கொதித்ததும் மாவில் வடிகட்டிவிட்டு உடனே நன்றாகப் பிசைந்து மாவு சூடாக இருக்கும் போதே பிழிந்து வேக வைத்து தேங்காய்பூ தூவவும். சுவையான கருப்பட்டி இடியாப்பம் ரெடி!

     

  • இடியாப்பம் செய்வது எப்படி?

    இடியாப்பம் செய்வது எப்படி?

    இடியாப்ப மாவு தயாரிக்கும் முறை

    பச்சரிசியை இடித்து மாவு தயாரிக்கவும்

     

    செய்முறை

    இடித்த மாவை வறுத்தும் இடியாப்பம் செய்யலாம். மாவை, மாவு இலேசாகி பறக்கும் வரையில் வறுத்துச் சலித்துக் கொள்ளவும்.

    மாவை இட்லிச்சட்டியில் ஒரு துணியில் வைத்து விரலினால் உருட்டினால் உருளும் வரை அவித்து, (உடனே கட்டியை எடுத்துவிட்டு) ரவை சல்லடையினால் சலித்து, கட்டியை மீண்டும் இடித்து சலித்து கடைசியில் பொடிக்கண் சல்லடையில் சலித்து விரிந்த தட்டில் உலர வைக்கவும்.

    இவ்விரண்டு முறையிலும் மாவு தயார் செய்து பல நாட்கள் கெடாமல் டின்களில் வைக்கலாம்.

    தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் ஊற்றி உப்புப்போட்டு பிசைந்து சூடாக இடியாப்பக் குழலில் பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்கவும்.சுவையான இடியாப்பம் ரெடி!

     

  • முறுகல் தோசை செய்வது எப்படி?

    முறுகல் தோசை செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி : 300 கிராம்
    பச்சரிசி : 75 கிராம்
    உளுந்தம்பருப்பு : 75 கிராம் (மேலும்…)

  • மசாலா தோசை செய்வது எப்படி?

    மசாலா தோசை செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு தயார் செய்து வைக்கவும்.
    உருளைக்கிழங்கு : 250 கிராம்
    மிளகாய் : 4 நறுக்கியது
    வெங்காயம் : 3 கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிதளவு (மேலும்…)

  • குழாய்ப்புட்டு செய்வது எப்படி?

    குழாய்ப்புட்டு செய்வது எப்படி?

    செய்முறை

    இடியாப்ப மாவில் சிறிது உப்புத்தண்ணீர் தெளித்து புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும்.

    புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப்பூவைப் போட்டு அடுத்து ஒரு கை மாவு போட்டு அடுத்து சீனி கொஞ்சம் தூவவும். அடுத்து தேங்காய்ப்பூ தூவவும்.

    பழையபடி மாவு, சீனி, தேங்காய்ப்பூ இவ்வாறு குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி, கலயத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேக வைக்க வேண்டும்.

    மூடியிலுள்ள தூவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும். சுவையான குழாய்ப்புட்டு ரெடி!