• சீனா லட்டு செய்வது எப்படி?

    சீனா லட்டு செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு : 250 கிராம்

    நெய் : 50 கிராம்

    முந்திரி : 25 கிராம்

    திராட்சை : 25 கிராம்

    சீனி : 500 கிராம்

    தேங்காய் : 1 மூடி

     

    செய்முறை

    சீனியை நைசாக மிக்ஸியில் அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய துறுவலையும், முந்திரி பருப்பு, திராட்சையும் சேர்த்து நெய்யில் வறுத்து எடுக்க வேண்டும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி நன்றாக சூடானதும் கடலைமாவை கொட்டி பச்சை வாசைன நீங்கும் படி வறுக்கவும். பின் அதோடு நைசாக சீனி, வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துறுவல் ஏலம்பொடி தூவி நன்றாக கிளற வேண்டும்.

    பின்னர் அதை கீழே இறக்கி சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான சீனா லட்டு ரெடி.

     

  • வெங்காய தூள் பக்கடா செய்வது எப்படி?

    வெங்காய தூள் பக்கடா செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு : 1 கிலோ

    கடலை எண்ணெய் : 300 மி.லி.

    பல்லாரி வெங்காயம் : 1 ½ கிலோ

    சோடா உப்பு : ½ தேக்கரண்டி

    மிளகாய் : 25 கிராம்

    உப்பு : தேவையானது

    எண்ணெய் : சுடுவதற்கு

     

    செய்முறை

    வெங்காயத்தை நீளமாக பொடியாக வெட்டவும், கடலைமாவில், சோடா உப்பு, உப்பு, வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் மிளகாய் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் உதிர்த்துப் போட்டு சிவந்ததும் எடுக்கவும். சுவையான வெங்காய தூள் பக்கடா ரெடி!

     

  • மைசூர் பாகு செய்வது எப்படி?

    மைசூர் பாகு செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு : 250 கிராம்

    சோடா உப்பு : 1 சிட்டிகை

    சீனி : 750 கிராம்

    டால்டா (அ) நெய் : 750 கிராம்

     

    செய்முறை

    கனத்த பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    மற்றொரு அடுப்பில் நெய்யை இளக வைத்து இடையிடையே கலவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும்போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து விட்டால் மைசூர் பாகு ரெடியாகி விடும். ஆறுவதற்கு முன் வில்லைகள் போடவும்.

     

  • பூந்தி செய்வது எப்படி?

    பூந்தி செய்வது எப்படி?

    பூந்தி மிகப் பிரபலமான இனிப்பு வகைகளுள் ஒன்று. தீபாவளி பலகாரங்களில் பூந்தி கட்டாயம் இடம் பெறும்.

    பூப்போல மெத் மெத் என்று இருக்கும் பூந்தி இனிப்பு பிரியர்களின் விருப்பமான நொறுக்குத் தீனி என்பதில் ஐயம் இல்லை.

    வாயில் பல் இல்லாத வயதானவர்களின் முதல் தேர்வு பூந்திதான். இனி சுவையான பூந்தியை எப்படி செய்வது என்று பார்ப்போம். (மேலும்…)

  • இனிப்பு பூரி செய்வது எப்படி?

    இனிப்பு பூரி செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு : 200 கிராம்

    அரிசி மாவு : 25 கிராம் (மேலும்…)