வான்புகழும் வானவர் வையத்தோர் மகிழ்ந்திடவே
தேன் மதுர தெய்வீக திருவருளால் தெரிவிக்க அரி
வாள் ஓங்கிநிற்கும் கருப்பண்ணசாமியை
வணங்கியே வளம் பெறுவோம் நாம்!
வான்புகழும் வானவர் வையத்தோர் மகிழ்ந்திடவே
தேன் மதுர தெய்வீக திருவருளால் தெரிவிக்க அரி
வாள் ஓங்கிநிற்கும் கருப்பண்ணசாமியை
வணங்கியே வளம் பெறுவோம் நாம்!
தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண்மதி சூடி
காடுடைய கடலைப்பொடி பூசி என்னுள்ளங்கவர் கள்வன் (மேலும்…)
உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே (மேலும்…)