யானைக்குப் பானை சரி

யானைக்குப் பானை சரி என்ற பழமொழிக்கு ஏற்ப பேசினால்தான் அடாவடி ஆட்களை அடக்க முடியும் என்று ஆசிரியர் ஒருவர் கூறுவதை அணில்குட்டி  அன்பழகன் கேட்டது.

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாப்பிளையும் பொண்ணும் இருங்காங்க என்று திருமண ஊர்வலத்தில் சென்ற புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப்பெண்ணைப் பற்றி வயதான பாட்டி ஒருவர் கூறுவதை எலிக்குட்டி ஏகாம்பரம் கேட்டது.

பெண் புத்தி பின் புத்தி

“பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படியா நடந்து கொள்வாய்” என்று இளம் வயது பெண்ணை நோக்கி முதியவர் ஒருவர் கூறுவதை மயில் மங்கம்மா கேட்டது.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியை பெண் ஒருத்தி கூறியதை சில்வண்டு சிங்காரம் கேட்டது. அப்பழமொழிக்கு மற்றொரு பெண் “பாத்திரத்தில் உணவு இருந்தால் மட்டுமே அதை அகப்பையால் (கரண்டியால்) எடுக்க முடியும் என்பதுதானே இதற்கான பொருள்” என்று கூறினாள்.