அம்மா அப்பா அறிவோம்

பெற்றோர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

அம்மா அப்பா அறிவோம் என்பது நமது பெற்றோரைப் பற்றிய சில மொழிகள்.

பெற்றோர்கள் நம்முடைய வாழ்விற்கு ஆதாரமானவர்கள் மட்டுமல்லர். நாம் வாழ்க்கைப் பயணத்தில் நேர்வழியில் பயணிக்க காரணமான‌வர்களும் ஆவர்.

அப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்வது அவசியம்.

 

நம்மை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர் அம்மா

நமக்கு உலகினை அறிமுகப்படுத்துபவர் அப்பா

Continue reading “அம்மா அப்பா அறிவோம்”

என் கையை விடமாட்டிங்கப்பா

தந்தை மகள்

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தைக் கடக்க முயற்சி செய்தனர்.

தந்தை சொல்கிறார் “என் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கோ”

மகள் சொல்கிறாள் “நீங்க, என் கையைப் பிடிச்சிக்கோங்க”

“ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?” தந்தை கேட்கிறார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்த ஒரு நிலையிலும் என் கையை விடமாட்டிங்கப்பா” என்றாள் மகள்.

அறிவும் பண்பும்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

அறிவும் பண்பும் இணைந்த வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாகும். அதையே திருவள்ளுவர் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

வைய‌த்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டும் ஒளி விளக்காக மிளிர்வது திருக்குறள். அடக்கம், அருள், அறிவு, அன்பு, ஊழ்வினை, ஊக்கம், ஒழுக்கம், நாண், பண்பு, பொறை ஆகிய பத்துவகை உடைமைகளைக் குறித்து விரித்துரைக்கின்றார் தெய்வப் புலவர். Continue reading “அறிவும் பண்பும்”

பருத்திச் செடி

பருத்திச் செடி

பூங்காவனம் என்றொரு காடு இருந்தது. அதில் பரந்து விரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது.

அதில் ஆண்கிளி, பெண்கிளி, கிளிக்குஞ்சுகள் ஆகியவற்றைக் கொண்ட கிளிக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. Continue reading “பருத்திச் செடி”

எங்கே போனது அன்பு நீருற்று?

அன்புப் பயிர்

அன்பு என்பது பண்டமாற்று முறையாய் இப்பொழுது இங்கு மாறிவிட்டது.

இதயம் முழுவதும் நேசம் பொங்க, இதயசிரிப்பில் முகம் மலர, உதட்டோர புன்னகையை தேக்கி ஆழமான நேசப்பார்வை காண்பது அரிதாகிவிட்;டது.

எங்கே தொலைத்தோம் அந்த அன்பு என்ற கண்ணியை.

வறுமையிலும் கொடிய வறுமை அன்பு வறுமை.

Continue reading “எங்கே போனது அன்பு நீருற்று?”