பௌர்ணமி வழிபாடு

முழு நிலா

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர். Continue reading “பௌர்ணமி வழிபாடு”

துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம்

துக்க நிவாரண அஷ்டகம் என்பது நமது கவலைகள் நீங்க நாம் காமாட்சி அம்மனை நினைத்துப் பாடும் எட்டுப் பாடல்களின் தொகுப்பு ஆகும். Continue reading “துக்க நிவாரண அஷ்டகம்”

அட்சய திருதியை

அட்சய திருதியை

அட்சய திருதியை சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்து மற்றும் சமணர் மதச் சேர்ந்தவர்கள் இந்நாளைப் புனிதநாளாகக் கருதுகின்றனர்.

அட்சயம் என்ற சொல்லுக்கு என்றும் குறைவில்லாது வளர்தல் என்பது பொருளாகும்.

அன்றைய தினத்தில் தொடங்கும் செயல்கள் எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் நாள் ஆதலால் இந்நாள் இந்துக்களால் அட்சய திருதியை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. Continue reading “அட்சய திருதியை”

சித்திரை சிறப்புகள்

தமிழ் புத்தாண்டு

சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. Continue reading “சித்திரை சிறப்புகள்”

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் கடலின் அலை ஓசையோடு இறைவனின் கருணை பொங்கும் இடங்களாக விளங்குகின்றன.

மாமல்லபுரக் கடற்கரை கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நாகபட்டின‌ம் காயாரோகனேஸ்வரர் கோவில், கோடியக்கரை அமிர்தக்கடேஸ்வரர் கோவில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில், கன்னியாகுமரி குமரிஅம்மன் கோவில் ஆகியவையே தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் ஆகும். Continue reading “தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்”