மக்களவைத் தேர்தல் 2019 ‍- என் பார்வை

இந்திய நாடாளுமன்றம்

மக்களவைத் தேர்தல் 2019 நடந்து முடிந்து விட்டது. ஒரு சுனாமியைப் போல அது கடந்து சென்றிருக்கின்றது. அதைப் பற்றிய என் கருத்துக்கள்.

நல்ல கருத்துக்கள்

1. நல்லவேளை, பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது. தொங்கு பாராளுமன்றம் அமைந்து, எம்பிக்களைக் குதிரை பேரம் செய்து, பல அசிங்கமான காட்சிகளை நாம் பார்க்காமல், மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்கியது ஒரு நல்ல செயல். Continue reading “மக்களவைத் தேர்தல் 2019 ‍- என் பார்வை”

இந்திய அரசியல் ‍- என் பார்வை

இந்தியா

இந்திய அரசியல் என்பது மதம், இனம், மொழி, சாதி என‌ மிக அதிகமான வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு நாட்டின் அரசியல்.

இது உலகிலேயே தனித்துவம் கொண்ட ஒரு நாட்டின் அரசியல். எளிதாக நம்மால் வேறு ஒரு நாட்டின் அரசியலை இந்திய அரசியலோடு ஒப்பிட முடியாது.

இந்த அதிகமான வேறுபாடுகளை பணம் என்னும் ஒரே கருவி எளிதில் வென்று விடுகின்றதோ என்றும் எண்ண வைக்கின்றது. Continue reading “இந்திய அரசியல் ‍- என் பார்வை”

செய்தித்தாள்

முன்னணி பத்திரிக்கைகள்

நம் அண்டை வீட்டுச் செய்தியிலிருந்து ஆயிரம் கல் தொலைவிலுள்ள நாடுகள், விண்வெளிக் கோளங்கள் ஆகியவற்றில் நிகழும் அதிசயச் செய்தி வரை நம்மிடம் கூறும் நண்பன் செய்தித்தாள். அதனால்தான் நாம் தினமும் அதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம். Continue reading “செய்தித்தாள்”

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி “உலகிலுள்ள எல்லா ஊர்களும் நமது ஊரே; உலக மக்கள் எல்லோரும் நம் உறவினரே” என்னும் நல்ல கருத்தை நம் மனதில் விதைத்தவர் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றன்.

உலகிலுள்ளார் அனைவரும் இன்புற்றிக்க வேண்டும் என்பதே அருளாளர்களின் கோட்பாடாகும்.

வள்ளுவர் உள்ளத்திலும் இக்கருத்து வளர்ந்திருந்தது. தமிழ்ச் சான்றோர்களின் கனவே இதுதான். Continue reading “யாதும் ஊரே யாவரும் கேளிர்”