கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்

அரசியல் கட்சிகள்

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நமது அணணன் ‍‍‍‍‍‍‍‍___________ அவர்கள்.

எனவே நமது அண்ணனுக்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் _________ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.

ஒரு வாரமாக‌ எந்நேரமும் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

முப்பொழுதும் காதில் பாலும் தேனும் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

வடையை வாயில் வைத்திருந்த காகத்தை நரி பாட்டுப் பாட சொன்ன கதை என் மனதில் தோன்றுகிறது. Continue reading “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்”

நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா என்று ஒரு பெரியவர், தன் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு பெரியவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

நகரப் பேருந்தில் நின்று கொண்டு, என் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் படித்துக் கொண்டே பயணம் செய்த எனக்கும் அது காதில் விழுந்தது.

ஒரு நிமிடம் என் மனம் வேதனையில் துடித்தது.

இது உண்மையா? என்று என் அறிவு யோசித்தது; உண்மை என்றே ஒத்துக் கொண்டது. Continue reading “நீதி இல்லாத நாடு இந்தியா”

அரசின் பரிசு – சிறுகதை

அரசின் பரிசு

“கவர்மண்டு அறிவிச்ச பொங்கல் பரிச நாளைக்கு நம்ம கூப்பங் கடைல குடுங்காங்களாம். நான் இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு வரிசைக்கு போப்போறேன். நீ வர்யா செல்லம்மா?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

“நாளைக்கு காலையில அம்மாவ பாக்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குப் போகனும். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு, தொடஞ்சு எடுத்திட்டு வரனும். நீ எனக்கும் சேர்த்து வரிசையப் போட்டுரு. நான் வந்து உங்கூட சேர்ந்துக்குறேன்.” என்றாள் செல்லம்மா. Continue reading “அரசின் பரிசு – சிறுகதை”