மானம் மறைப்பது அழகே!

மானம் மறைப்பது அழகே

ஒரு தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் விமலா. சேர்ந்த முதல் நாளில், சேலை அணிந்து வந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தது.

Continue reading “மானம் மறைப்பது அழகே!”

அழகு பேரழகு – கவிதை

எது அழகு என்று பட்டியல் கொடுக்கிறார் கி.அன்புமொழி. இந்தக் கவிதை படித்தபின் நாம் பார்க்கும் அனைத்துமே அழகாய்த் தெரிகிறது.

உன்னிலும் உண்டு அழகு
என்னிலும் உண்டு அழகு
மண்ணிலும் உண்டு அழகு
கண்ணிலும் உண்டு அழகு
உருவத்தின் அழகு அழகல்ல
உள்ளத்தின் அழகே அழகு!

பறக்கும் பறவை அழகு
பிறக்கும் குழவி அழகு
மறக்கும் தீமை அழகு
உறங்கும் இரவும் அழகு
திறக்கும் மனம் அழகு
கறக்கும் பாலும் அழகு
துறக்கும் ஆசை அழகு!

Continue reading “அழகு பேரழகு – கவிதை”

இனிது என்னும் பூந்தேன் இதழ்

இனிது

திக்கெட்டும் வாழன்பர் சேர்க்கும் படைப்புகளை

மிக்கநலம் தோன்ற வெளியிட்டு – மக்கள்

மனதெல்லாம் அள்ள மலருமே என்றும்

இனிதென்னும் பூந்தேன் இதழ்

இமயவரம்பன்