சோற்றுக் கற்றாழை – மருத்துவ பயன்கள்

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை சதைப் பற்றான சிறுசெடி வகைச் சேர்ந்தது. சோற்றுக் கற்றாழை வெப்பமான பகுதிகளில், வயல் வரப்புகளிலும் சற்றே உயரமான வேலிகளிலும் வளரும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். சோற்றுக் கற்றாழை நீண்டு உயர்ந்து வளர்ந்த தண்டுப் பூங்கொத்து சில நேரங்களில் காணப்படும். பூக்கள் பழுப்பான வெண்மை நிறமானவை. Continue reading “சோற்றுக் கற்றாழை – மருத்துவ பயன்கள்”

செம்பருத்தி – மருத்துவ பயன்கள்

செம்பருத்தி

செம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப் படுத்தும். செம்பருத்தி மலமிளக்கும்; வறட்சி அகற்றும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்;காமம் பெருகும்; மாதவிடாயைத் தூண்டும். Continue reading “செம்பருத்தி – மருத்துவ பயன்கள்”

கஸ்தூரி மஞ்சள் – மருத்துவ பயன்கள்

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் எனப்படுவது காய்ந்த கிழங்குகளே ஆகும். கத்தூரி மஞ்சள் என்றும் கூறப்படும். கஸ்தூரி மஞ்சள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது.

கஸ்தூரி மஞ்சள் பெரும்பாலும், வெளி உபயோகத்திற்கான மருந்தாகப் பயன்படுகின்றது. அரைத்துப் பசையாக்கி தேய்த்துக் குளிக்க கரப்பான், கிருமிநோய்கள் போன்றவற்றைப் போக்கும். தோல் பளபளப்பாகும். Continue reading “கஸ்தூரி மஞ்சள் – மருத்துவ பயன்கள்”

இஞ்சி – மருத்துவ பயன்கள்

இஞ்சி

இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும். Continue reading “இஞ்சி – மருத்துவ பயன்கள்”