எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

இரண்டாவது டோஸ் காபிக்காக அடுப்பில் பாலை வைத்துவிட்டு, டபரா டம்ளரை எடுத்து சமையல் மேடையில் வைத்துவிட்டு, ஜீனி டப்பாவை கப்போர்டிலிருந்து எடுக்க முயன்ற சாவித்ரி மாமியின் அறுபத்தைந்து வயது உடல் தடுமாறியது.

தலை சுற்றுவதுபோல் இருந்தது. அழுதழுது ‘தலை’ வலிக்க வேறு செய்தது. எல்லாம் காலையில் கணவர் சாம்பசிவம் அறைந்த அறையாலும் அடித்த அடியாலும் விளைந்தவை.

இருபத்தைந்து வயதில் வாங்க ஆரம்பித்த அறையும் அடியும் இந்த அறுபத்தைந்து வயதிலும் மருமகள், மாப்பிள்ளை வந்தும் பேரன், பேத்திகள் எடுத்தும் இன்னும் நின்றபாடில்லை.

Continue reading “எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

போகிப் பண்டிகை – கவிதை

ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை

சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…

இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…

Continue reading “போகிப் பண்டிகை – கவிதை”