மகிழினி காலையில் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று மயங்கி விழுந்தாள்.
கீழே விழும்போது எதிரே இருந்த மேஜையில் தலைமோதி, முன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அப்பா, அம்மா, தங்கை மூவரும் அலறி அடித்து ஓடிவந்து தூக்கினார்கள். மகிழினி பேச்சு மூச்சற்று கிடந்தாள்.
அக்கம் பக்க மனிதர்கள் எல்லாம் கூடி ஆம்புலன்ஸில் ஏற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள்.
“அய்யோ, மகமாயி தாயீ, எம்புள்ளைக்கு என்னாச்சு? இந்த சின்ன வயசுலேயே உழைச்சு குடும்பத்தை காப்பாத்திற என் தங்கத்துக்கு என்னாச்சு?” என தேம்பி தேம்பி அழுத மகிழின் அம்மா கனகத்தை சின்ன மகள் யாழினி தாங்கி பிடித்து கொண்டிருந்தாள்.
(மேலும்…)