சுதந்திரக் கூச்சல்

சுதந்திர கூச்சல்

‘சுதந்திரக் கூச்சல்’ என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

பயிற்சி மொழி, ‘தமிழா, ஆங்கிலமா?’ என்ற சிக்கலில் உரிமைப் பிரச்சனை ஒன்றும் எழுப்பப்படுகின்றது.

பயிற்சிமொழி எது? என்பதில் இறுதியாக முடிவு எடுக்கும் உரிமை அல்லது பொறுப்பு, பல்கலைக்கழகத்தினுடையதா? அரசாங்கத்தினுடையதா? என்பதே அந்தப் பிரச்சினை. Continue reading “சுதந்திரக் கூச்சல்”

பொது மொழி எது?

மொழிகள்

பொது மொழி எது? என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

இந்தியாவில் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப் பெற்ற பதினான்கு மொழிகளில், உருது மற்றும் சமஸ்கிருதம் நீங்கலாக ‘அரசு மொழி’ என்ற சிறப்புக்குரியவை பன்னிரண்டு மொழிகளாகும். Continue reading “பொது மொழி எது?”

பச்சிளங் குழவிக்கும் ஆங்கில‌ மொழியா?

ஆசிரியர்

பச்சிளங் குழவிக்கும் ஆங்கில‌ மொழியா?  என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும். Continue reading “பச்சிளங் குழவிக்கும் ஆங்கில‌ மொழியா?”

பயிற்சி மொழி தமிழ்

பயிற்சி மொழி - தமிழ்

பயிற்சி மொழி தமிழ் என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

புரியாத புதிர்

மொழித் துறையில் தமிழகத்தின் போக்கு, உலகினால் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிர். இங்கு தாய் மொழியைப் புறக்கணித்துப், பரங்கி மொழியில் மட்டுமே புலமை பெறுவதற்குப் பெயர், பரந்த புத்தி.

பரங்கி மொழிப் பயில்வதற்குத் தடையில்லாத வகையில், தாய்மொழி மூலம் கல்வி கற்க வேண்டும் என்று கூறுவது கூட குறுகிய புத்தி.

மொழிவெறி!

இவை மட்டுமா? பிரதேச மொழிக்கு எதிராக, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை வளர்க்கும் பல்கலைக் கழகங்களும் தமிழகத்தில்தான் இருக்கின்றன.

தாய்மொழியில் சிறிதேனும் ஞானமில்லாத ஒரு பாமரர், பல்கலை கழகத்தின் துணை வேந்தராக இருப்பதும் இந்த தமிழ் நாட்டில்தான்! இது, உலகங் காணாத புதுமை! பு…ர்….ர…ட்…சி.

பரங்கி மொழி பயின்று, அதிலே பட்டம் பெற்றவர்கள் உயர் சாதியினராக மதிக்கப்படுவதும் இந்த மாநிலத்தில்தான்!

 

கல்வியறிவுடைய இருவர் சந்திக்குங்கால், தாய் மொழியை மறந்து, பரங்கி மொழியில் உரையாடும் மாபாதகமும் இந்த மாநிலத்தில்தான் நடைபெறக் காண்கிறோம்.

 

நான்காம் படிவத்தோடு பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பிள்ளைகூட, தான் ஆங்கிலப் புலமை பெற்றுவிட்டாற் போல நடிக்கும் நாடக மேடையாக விளங்குவதும் தமிழ்நாடுதான்.

இந்தக் குறைபாடுகளுக்குப் பல்கலைக் கழகங்களையோ, துணைவேந்தர்களையோ மட்டும் பொறுப்பாக்கி விடுவதற்கில்லை.

பரங்கி மொழி மோகம், தமிழ் இனத்தவர் அனைவரையுமே பிடித்துள்ள பொது ‘வியாதி’யாகி விட்டது. தமிழகத்து அரசியல் கட்சிகளும் இந்த வியாதிக்கு விலக்கல்ல. Continue reading “பயிற்சி மொழி தமிழ்”

தாய்மொழியில் உயர் கல்வி

தமிழ்

தாய்மொழியில் உயர் கல்வி என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

எனது கொள்கை, எனது தலைமையிலுள்ள தமிழரசுக் கழகத்தின் லட்சியம், “உடனடியாக தமிழகத்திலுள்ள எல்லாக் கல்லூரிகளிலுமே – எல்லா வகுப்புகளிலுமே தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டும்” என்பதுதான். அது சாத்தியம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. Continue reading “தாய்மொழியில் உயர் கல்வி”