கோதையுடன் கோபாலன்
வீதி வரும் வேளையிலே
பாவை தந்த பாவையவள்
பார்வை நமக்கும் கிடைக்குமன்றோ!
Tag: ஆண்டாள்
-
வீதி வரும் வேளையிலே
-
திருப்பாவை என்னும் பாவை பாட்டு
திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன. (மேலும்…)
-
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்ற பாடல் ‘கோதை நாச்சியார்’ ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதல் பாடலாகும்.
இது உலகைக் காக்கும் நாயகனான நாராயணின் அருளை வேண்டி பாவை நோன்புக்காக, பாவையர்களாகிய பெண்களை ‘வாருங்கள் நீராட’ என நீராட அழைப்பு விடுப்பதாக அமைந்த பாசுரம். (மேலும்…)
-
திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு
திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.
இப்பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன.
பாசுரம் என்றால் பாட்டு என்று அர்த்தம். திருப்பாவையில் உள்ள முப்பது பாட்டுக்களும் எவ்விதம் அமைக்கப்பட்டுள்ளன என்பதை திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு என்ற கட்டுரை விளக்குகின்றது. (மேலும்…)
-
திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்
வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது.
(மேலும்…)