எத்தனை விறகுகள் எரிந்தனவோ
விடுதலைப் பருக்கைகள் வேகுதற்கே
எத்தனைக் கனவுகள் கலைந்தனவோ
இத்தரை விடியலில் எழுவதற்கே
எத்தனை விளக்குகள் அணைந்தனவோ
இத்தரை ஒளியினில் சுடர்வதற்கே
எத்தனை உயிர் மாய்ந்தனவோ
இத்தரை உணர்வினைக் காப்பதற்கே
போகிப் பண்டிகை – கவிதை
ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை
சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…
இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…
வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய பாரதம்! வாழிய பாரதம்!
வாழிய வாழியவே!
எங்கள் பாரதம் வாழிய வாழியவே!
பாரதநாடு நம் நாடு
பண்பாடுகள் நிறைந்த நன்னாடு
வளங்கள் மிகுந்த பொன்னாடு
வாழிய எங்கள் திருநாடு
சிறந்த சமுதாயம் உருவாக என்ன செய்ய வேண்டும்?
இன்றைக்கு நாகரிகத்தால் அலங்கார நாய்கள் வளர்க்கும் மேதைகள் உருவாகி விட்டார்கள். அவற்றிற்கான செலவினம் மிக மிக அதிகம். பெற்றோர்க்குச் செலவிடும் அளவை விட அதிகம்.
எத்தனையோ வீடுகளில் பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலும், நாய்கள் குளிர்பதன அறைகளிலும் இருப்பதைக் காணலாம்.
Continue reading “சிறந்த சமுதாயம் உருவாக என்ன செய்ய வேண்டும்?”சாதி – சில சிந்தனைகள்
சாதி என்பது ஓர் இந்தியனின் முக்கியமான அடையாளம். நம்முடைய சிந்தனையில் சாதி என்பது பிரிக்க முடியாதது. நாம் சாதியைக் கடந்து போக நினைத்தாலும், இந்த சமூகம் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு விடாது.
அடையாளம் என்பதைத் தாண்டி ஆதாரம் என்ற நிலையை நோக்கி சாதி நகர்கிறது. சாதியை நமக்கான ஒரு பலம் பொருந்திய பின்ணணியாக நாம் பார்க்கிறோம்; நம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதனை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.
சாதியை விட்டு விட்டு நம்மால் யோசிக்க முடியவில்லை.
ஒருபுறம் நல்ல கல்வி பெற்ற, பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் சாதியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலை கொஞ்சம் தோன்றுகிறது.
மறுபுறம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் உருவாக்கும் சாதிப் பற்று, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள அதிகம் படிக்காத, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மிக எளிதாக சாதி வெறியர்களாக மாற்றி விடுகிறது.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ சாதி ஒரு மறுக்க முடியாத சக்தி. சாதி பற்றிய ஒரு தெளிவு இருந்தால்தான் இந்தியாவில் பொதுவாழ்வில் நாம் ஏதேனும் சிறிதளவு நல்ல வழியில் பங்காற்ற முடியும்.
அத்தகைய ஒரு தெளிவைத் தன் இலக்கிய ஆராய்ச்சியின் மூலம் நமக்கு வழங்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
Continue reading “சாதி – சில சிந்தனைகள்”