Tag: இனிப்பு

  • தேன் மிட்டாய் செய்வது எப்படி?

    தேன் மிட்டாய் செய்வது எப்படி?

    தேன் மிட்டாய் நினைத்தாலே நாவில் நீரினை வரவழைக்கும் இனிப்பு. தேன் மிட்டாயினை வாயில் போட்டு லேசாகக் கடிக்கும்போது, அதனுள் இருக்கும் சர்க்கரைப்பாகு தேனாக இனிக்கும்.

    சிவப்புக் கலரில் கண்ணைக் கவரும் தேன் மிட்டாய், நான் பள்ளியில் பயிலும் காலங்களில் தினந்தோறும் வாங்கி உண்ணும் தின்பண்டங்களில் ஒன்று.

    இதனை எளிதான முறையில் சுவையாக நம்முடைய வீட்டிலேயே தயார் செய்து உண்ணும்போது, நம்முடைய நினைவில் என்றைக்கும் இருந்து கொண்டே இருக்கும்.

    (மேலும்…)
  • பூந்தி லட்டு செய்வது எப்படி?

    பூந்தி லட்டு செய்வது எப்படி?

    பூந்தி லட்டு தித்திக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்று. முதன் முறையாக சமைப்பவர்களும் கூட எளிதில் செய்யக் கூடிய இனிப்பு வகை இது.

    இதனை அசத்தலாகச் செய்வதற்கு ஒருசில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் மட்டும் போதும்.

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் இதனை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

    (மேலும்…)
  • கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி?

    கருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி?

    கருப்பு உளுந்து லட்டு உடலுக்கும் எலும்புக்கும் வலுவினை உண்டாக்கும் சத்தான உணவு ஆகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.

    இரும்புச் சத்து, கால்சியம் சத்து, ஜிங்க் சத்து உள்ளிட்ட உடல் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்களை இது உள்ளடக்கியுள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும்.

    (மேலும்…)
  • கோதுமை ரவை பாயசம் செய்வது எப்படி?

    கோதுமை ரவை பாயசம் செய்வது எப்படி?

    கோதுமை ரவை பாயசம் அருமையான இனிப்பு வகை சிற்றுண்டி ஆகும். இதனை திருவிழா நாட்களிலும், விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

    இது உண்பதற்கு மெதுவாகவும், தித்திப்பாகவும் இருக்கும். இந்த இனிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது.

    இனி எளிதான முறையில் சுவையான கோதுமை ரவை பாயசம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

    (மேலும்…)
  • பைனாப்பிள் ஜாம் செய்வது எப்படி?

    பைனாப்பிள் ஜாம் செய்வது எப்படி?

    பைனாப்பிள் ஜாம் மணமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் ஜாம் ஆகும். நிறைய கடைகளில் பிரட்டிற்கு பைனாப்பிள் ஜாம் வைத்தே தருவர்.

    இதனை வீட்டில் சுலபமாகவும், வேறு ஏதும் பதப்படுத்தப்படும் பொருட்கள் (Preservatives) சேர்க்கமால் செய்யலாம்.

    இப்போது பைனாப்பிள் சீசன் ஆதலால் இதனை தயார் செய்து குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

    (மேலும்…)