தோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்
வரைந்தவர்: இமயவரம்பன்
திருவடியாய் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே
(மேலும்…)விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்
வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்
அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்
அருகில் தோன்றிடும் நற்பர லோகமே
(மேலும்…)கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்
காற்று தரும்சுகம் நாடிடுவோம்
படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி
பறந்திட உடல்வளம் கூடிடுவோம்
(மேலும்…)ஆதியில் நின்ற அருமொழியாம் – அணி
ஆயிரம் கொண்ட தனிமொழியாம்
ஓதிடும் செம்மொழி யாவினுமே – புகழ்
ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!
(மேலும்…)