இயல் விருது பெறும் இ.மயூரநாதன்

இ.மயூரநாதன்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.  Continue reading “இயல் விருது பெறும் இ.மயூரநாதன்”

இலங்கை அரசுக்கு நன்றி

Maithripala_Sirisena

இலங்கை அரசு தமிழர்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட 700 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளது. இதற்காக இலங்கை அரசை அனைவரும் பாராட்டலாம். Continue reading “இலங்கை அரசுக்கு நன்றி”

அட! தங்கமே……….. தங்கம்

தங்கம்

இந்தியாவில், கையில் கழுத்தில் கிடக்கும் நகையிலிருந்து, கோயில் கலசங்கள் முதல், சேலை ஜரிகை வரை தங்கம் இருக்கிறது.

தங்கத்தால் செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தங்க பஸ்ப லேகியம் போன்ற மருந்துகளில் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பல் போன பெரியவர்கள் தங்கத்தால் பல்செய்து மாட்டிக் கொண்டு சிரித்து மகிழ்கின்றனர்.

ஏழை அன்புத் தாய் தன் குழந்தையை என் தங்கமே…… பொன்னே! என்று அன்பு ஒழுகக் கொஞ்சி மகிழ்கிறாள்; தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கம், பொன், கனகம் எனப் பெயர் சூட்டி மகிழ்கின்றார். Continue reading “அட! தங்கமே……….. தங்கம்”