பத்தில் ஒன்று – சிறுகதை

பத்தில் ஒன்று - சிறுகதை

இருவரும், வெளியே கிளம்பிக் கொண்டிருந்த சமயம் செல்பேசி சிணுங்கியது.

மலர் கடுப்பானாள்.

“முதல்ல செல்பேசியை அணைத்து வைங்க” எனச் சீறினாள்.

எதிர் முனையில் பழனி, மோகனின் நண்பன்.

“என்னப்பா?” என மோகன் ஆரம்பிக்க…

மலர் கண்களில் கோபம் தாண்டவமாடியது.

Continue reading “பத்தில் ஒன்று – சிறுகதை”

பிறந்த வீடா? புகுந்த வீடா?

பிறந்த வீடா? புகுந்த வீடா?

பிறந்த வீட்டின் சீராட்டும் தாலாட்டும் ஒருபெண்ணுக்குத் திருமணமாகும் வரைதான்.

புகுந்த வீடு சென்றதுமே பிறந்த வீட்டு மவுசு கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து விடுகிறது.

Continue reading “பிறந்த வீடா? புகுந்த வீடா?”

ஆணின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாய் இருப்பது தாயா? தாரமா?

வாழ்க்கையில் மனிதனானவன் பெற்றோர்களின் கண்காணிப்பில் அல்லது பெற்றோர்களைச் சார்ந்து இருப்பது அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளே.

ஒரு சிலர் வாழ்க்கையில் கொஞ்சம் முன்பின் இருக்கலாம். எஞ்சியுள்ள வாழ்க்கையை அதாவது அவனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் திருமணத்திற்குப் பிறகு தாரத்துடன்தான் கழிக்க வேண்டியவனாக இருக்கிறான்.

Continue reading “ஆணின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாய் இருப்பது தாயா? தாரமா?”

பொறுப்பாளி யார்?

‘தாயிற் சிறந்த‌ கோயில் இல்லை’ ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது பழமொழி. ஒரு குறிப்பிட்ட வயதுவரை குழந்தையானது தாயைச் சார்ந்தே வளர்ந்து வருகிறது.

பள்ளியில் சேர்க்கும் வரை என்று சொல்லலாம். உறக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்கச் செய்து ஆடைகளை மாட்டி, உணவை ஊட்டி பள்ளிக்கு அனுப்பும் வரை தாயானவள் தன் குழந்தையுடன் ஒன்றிப் போய்விடுகிறாள்.

குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என தாயானவள் தன் குழந்தைக்குக் கோயில் மாதிரிதான்.

கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் குழந்தைக்கு விவரம் தெரிகிற வயது வந்ததும், தந்தையின் கடமையும் ஆரம்பமாகிவிடுகிறது.

Continue reading “பொறுப்பாளி யார்?”

சுயசேவையா… சே… சே… – சிறுகதை

சுயசேவையா... சே... சே... - சிறுகதை

மாலை அலுவலகம் முடிந்து மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாய் பார்த்து வாங்கி பையில் நிரப்பிக் கொண்டு, ரொம்பவும் களைப்புற்றவனாய் தளர்ந்த நடையுடன் ‘அண்ணா நகர்’ பஸ்ஸைப் பிடிக்க வந்து கொண்டிருந்தபோது, வழி நெடுக பல ஹோட்டல்கள் கண்ணில் பட, விலைப்பட்டியலோ பயமுறுத்த, உள்ளே நுழையத் தயங்கினான் சேகர்.

தெப்பக்குளம் எதிரிலிருந்த சிந்தாமணி கேண்டீனைக் கண்டதும் மனதில் ‘குபுக்’கென மகிழ்ச்சி பொங்கியது அவனுக்கு.

Continue reading “சுயசேவையா… சே… சே… – சிறுகதை”