மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்த மூங்கில் ஆசிய நாடுகளின் உஷ்ணப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. கிட்டத்தட்ட மரம் போல் காட்சியளிக்கும்.

மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக மூங்கிலானது 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். அதன் பருமன் 0.3 மீட்டராக இருக்கும்.

Continue reading “மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”

கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்

காந்தி

என்றைக்காவது ஓர் நாள் நாம் அனைவருமே மரணப் படுக்கையில் துயில் கொள்வது நிஜம்!

உயிர் நம் உடலை விட்டுப் பிரியும் முன், சிலர் மௌனமாகக் கண்களை மூடலாம். இன்னும் சிலரோ அருகிலிருப்பவர்களிடம் ஏதோ சொல்லி விட்டுக் கண்களை மூடலாம். மேலும் சிலர் படைத்த இறைவனை நினைத்து அவனது நாமத்தை உச்சரிக்கலாம்.

Continue reading “கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்”

கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

‘கால் பந்தாட்டம்’ என்பது இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றிலும் பதினோரு விளையாட்டு வீரர்களைக் கொண்டு நீண்ட சதுர மைதானத்தில் ஆடப்படும் ஓர் ஆட்டம்.

மைதானத்தின் இரு மூலைகளிலும் ‘கோல் கம்பம்’ (Goal Post) அமைக்கப்பட்டு காலால் உதைக்கப்படும் பந்தை ஒருவருக்கொருவர் எதிரணியின் கம்பத்திற்குள் நுழைக்க உற்சாகத்துடன், உத்வேகத்துடன் ஆடி, வெற்றி வாகை சூட முயல்வர்.

Continue reading “கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்”

ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்

ஆந்தையை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! இரவு நேரங்களில், மாலைப் பொழுதுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு அலறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆந்தையின் அலறல் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதற்காக ‘ஆந்தை’ என்றதும் பயந்து போய் ஓடிவிடாதீர்கள்!

Continue reading “ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்”

தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்

இஞ்சி ஒரு லவங்கப் பொருள் மட்டுமின்றி, வேருடன் கூடிய காய்கறி வகையைச் சேர்ந்தது என்றும் கூறலாம். இஞ்சி பூமிக்கு அடியில் விளையக் கூடியது.

முதன்முதலாக இந்தியாவிலும், பிறகு சீனாவிலும் இஞ்சி பயிரிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இஞ்சியைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியத்திலும் சீன மருத்துவக் கட்டுரைகளிலும் நிறையவே இடம் பெற்றுள்ளன.

Continue reading “தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்”