மழைக்காலங்களில்
அலுவலகம் செல்லும்
அவசரக் காலைகளில்
அடம்பிடித்து
வீரிட்டழும் குழந்தையாய்
கூடவே வருகிறது
தினம் பெருமழை!
வணக்கம் சொல்லும் புதிர்கள்! – எஸ்.மகேஷ்
ஒரு கோப்பை
தேநீருடன்
மஞ்சள் பூவையும்
பூக்கள் குலுங்கும்
நந்தவனத்தையும்
இருவரும்
பரிமாறிக் கொண்டோம்!
காவியக் கனவு! – எஸ்.மகேஷ்
அன்னம்போலே நடந்து வந்து
என்னைத் தொடுவாளோ-அவள்
சின்ன இதழில் முத்தம் தந்து
மோகம் தொடுப்பாளோ!
முதுமையின் தாக்கம்! – எஸ்.மகேஷ்
ஏதேனும் நேரலாம்
எனும் எண்ணம்
பரவியும் படர்ந்தும்
பயந்திருக்கும் பிம்பம்
தினம் கடக்கும்!
இலக்கைத் தொலைத்தல்! – எஸ்.மகேஷ்
இலக்குகள்
மறந்து போகும்
ஒரு நெடிய
பயணத் தொலைவிற்கு அப்பால்!