எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.

சென்னை வெள்ளம்

எல் நினோ இன்றைக்கு அதிக மழை மற்றும் அதிக வெயில் உள்ளிட்ட தட்பவெப்ப மாறுதல்கள் மற்றும் பேரழிவுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இக்கட்டுரையில் எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம். Continue reading “எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.”

கடல் மாசுபாடு

செத்து மிதக்கும் மீன்க‌ள்

கடல் மாசுபாடு என்பது மாசுபடுத்திகள் கடலில் கலந்து அதன் இயற்பியல், வேதியில், உயிரியல் தன்மையில் பாதிப்பை உண்டாக்கி உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும்.

கடல் என்பது உலகின் 97 சதவீத தண்ணீரைக் கொண்டுள்ளது. பரந்து விரிந்து ஆழமாக உள்ள கடலில் கழிவுகளைக் கொட்டுவதால் தீங்கு ஏதும் ஏற்படாது என்று ஆரம்ப காலத்தில் கருதப்பட்டது.

ஆனால் உண்மையில் கழிவுகள் தொடர்ந்து கடல் பகுதியில் கொட்டப்பட்டு சேகரமாகி இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்துதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. Continue reading “கடல் மாசுபாடு”

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் கடலின் அலை ஓசையோடு இறைவனின் கருணை பொங்கும் இடங்களாக விளங்குகின்றன.

மாமல்லபுரக் கடற்கரை கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நாகபட்டின‌ம் காயாரோகனேஸ்வரர் கோவில், கோடியக்கரை அமிர்தக்கடேஸ்வரர் கோவில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில், கன்னியாகுமரி குமரிஅம்மன் கோவில் ஆகியவையே தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் ஆகும். Continue reading “தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்”

தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்

கன்னியாகுமரி கடற்கரை

விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும்.

தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தெளிவான நீருடன் தமிழ்நாட்டில் மிக அழகிய கடற்கரைகள் பல உள்ளன. தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள் எவை என்று பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்”

நீர் மாசுபாடு

நீர் மாசுபாடு

நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும்.

நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மாற்றம் செய்யும் பொருளானது நீரில் கலந்து அதன் தன்மையையும், தரத்தினையும் மாற்றும் நிகழ்வு நீர்மாசுபாடு என்று வழங்கப்படுகிறது. Continue reading “நீர் மாசுபாடு”