காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி

காதல் பிரிவு

அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

Continue reading “காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி”

அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ

திருமணம்

அந்த எந்திரப் பறவை தரையிறங்க பத்து நிமிடமே இருந்தது. கிட்டத்தட்ட எல்லா பயணியரும் பரபரப்புடன் இருந்தனர். வசந்த் லேசான புன்முறுவலுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து மணி நேரம் பொறுமையாகப் பிரயாணம் செய்பவர்களால் பத்து நிமிடம் காத்திருக்க முடியவில்லை. அவரவருக்கு என்று பல சொந்த காரணங்கள் இருக்கக் கூடும்.

அறிவிப்பின்படி சீட் பெல்ட் அணிந்து கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். மறுநிமிடம் மூடிய இமைகளுக்குள் லிசியின் முகம் வந்து மறைந்தது. லிசி அவனைக் கட்டிப் பிடித்து வழி அனுப்பியிருந்தாள்.

Continue reading “அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 1 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

மேடும் பள்ளமுமாய், குண்டும் குழியுமாய் பெயரளவுக்குத் ‘தார்ச்சாலை’ என்ற அடையாளத்தோடுக் காணப்பட்ட அந்தப் போக்குவரத்துச் சாலையில் கப்பி பெயர்ந்து ஆங்காங்கே காணப்படும் பெரிதும், சின்னதுமான பள்ளங்களில் முதல்நாள் இரவு பெய்த மழையால் கலங்கலான தண்ணீர் தேங்கிக் கிடந்தது.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 1 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

அதிகாலை நேரம்.

“டீ, காபி! டீ, காபி! டீ, காபி!”

“வடை! வடை! வடை! வடை! சூடான வடை!”

குரலின் சர்ச்சைகளை கேட்டு கண் விழித்தாள் ரோகிணி.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். இரவு முழுதும் பொழிந்த பனிச்சாரலில் நனைந்த ரோஜாவை போல் அவளின் முகம் மலர்ந்திருந்தது.

மீனைப் போல் வளைந்த புருவமும், பார்ப்பவரை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் காந்த விழிகளும் அவளுக்கென்று அழகாய் இருந்தது.

Continue reading “பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்

முன்பொரு காலத்தில்
என்றெல்லாம் சொல்லக் கதைகளில்லை…
சில நாட்களுக்கு முன்னரே
சந்தித்துக் கொண்டோம் நீயும் நானும்…

Continue reading “காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்”