மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்

மரங்களும் சுயசார்பும்

மரங்களும் சுயசார்பும் எப்படி அன்றைய கிராம வாழ்வை செம்மைப் படுத்தின என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

சுயசார்பு வாழ்க்கை என்பது பிறரை எதிர்பார்க்காமல் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகும்.

அவ்வகையில் அன்றைய கிராமங்களில் மக்கள் பல்வேறு வகையான மரங்களை வளர்த்து தங்களின் அன்றாட‌ தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். அம்மரங்களைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.

Continue reading “மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்”

வளர்ந்த கீரை வாடும் முன்னே! – இராசபாளையம் முருகேசன்

சாஸ்தா கோவில் அணை அருகே தோட்டம்

வளர்ந்த கீரை வாடும் முன்னே
வட்டிலிலே விழ வச்ச எங்க மண்ணு…

வளர்க்க படாத நாய்கள் கூட்டம் வாலை
ஆட்டித் தெருவைக் காக்கும் எங்க மண்ணு…

Continue reading “வளர்ந்த கீரை வாடும் முன்னே! – இராசபாளையம் முருகேசன்”

தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்

தெருவெங்கும் கிணறிருந்தது

மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது

வருணன் என்றொரு கடவுளை வணங்க

வற்றாமல் அது இருந்தது

Continue reading “தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்”

சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

ஆடு வளர்ப்பு

வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.

அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.

Continue reading “சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”