“குரு, என்னடா பண்ற? பள்ளிக்கூடம் வரலியா?” பள்ளி செல்லும் வழியில் சாலையின் ஓரமாய் நின்றிருந்தவனிடம் மூர்த்தி கேட்டான்.
“நீ போடா. நான் வந்துடுறேன்.”
மூர்த்தி சென்றான். அடுத்த நாள் அதே நேரம் மூர்த்தி வந்தான்.
“டேய் குரு, என்னாச்சு உனக்கு? தினமும் எனக்கு முன்னாடியே பள்ளிக்கூடம் பொய்டுவ. ரெண்டு நாளா பொறுமையா வர. என்னடா சங்கதி?”
“அதெல்லாம் ஒன்னுமில்லடா. நீ போ”
மூர்த்தி என்னன்னு தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான். சிறிது தூரம் சென்று ஒரு மரத்தின் பின்னே மறைவாய் நின்று பார்த்தான். (மேலும்…)