Tag: கி.அன்புமொழி
-
கி.அன்புமொழிக்கு விருது
மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், திருமதி கே.ஆர்.செல்லம்மாள் நினைவு உலகத் தமிழாய்வு மையம், மதுரைசரஸ்வதி அறக்கட்டளை & அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை இணைந்து வழங்கும் சர்வதேச முத்தமிழ் விருதுகள் விழா 2022 ல் எழுத்தாளர் கி.அன்புமொழி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற கி.அன்புமொழி அவர்களை இனிது வாழ்த்துகிறது.
-
மகள் ஒரு தொடர்கதை – சிறுகதை
பந்தலும் தோரணமும் வாழை மரங்களும், பந்தலுக்கு நடுவே ‘வருக வருக’ என எழுதி மின்மினிப் பூச்சிகள் போல் விட்டு விட்டு மினுமினுக்கும் மின்சார விளக்குள்ள பலகையும், பந்தலுக்கு அடியில் வரிசையாக போடப்பட்டிருந்த மரத்தாலான இருக்கைகளும், சுரைக்காய் போல் பந்தல் மேல் இடைவெளி விட்டு நீட்டியிருந்த இரண்டு புனலில் ஓயாமல் கலகலப்பாக ஒலித்துக் கொண்டிருந்த சினிமா பாடல்களும் மனோ வீட்டில் ஏதோ விஷேஷம் என்பதை வெளிப்படுத்தின.
-
அன்னதானம் – சிறுகதை
“தெரிஞ்சவங்களுக்கு போடுறதுக்குப் பேரு அன்னதானம் இல்ல அன்னம்தான். தெரியாதவங்களுக்கு போட்டாத்தான் அன்னதானம் இதை முதல்ல புரிஞ்சிக்க.”
-
ஏழையின் மதிப்பு – சிறுகதை
அன்று தெருவில் யாரும் வெளியே இல்லை. ‘இராயல் ஸ்டீரீட்’ என்னும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த தெருவில் அனைத்து வீட்டிலும் கறிக்குழம்பு மணமும், மீன்குழம்பின் வாசமும் தென்றலைப் போல அருமையாக வீசின. ஞாயிற்றுக் கிழமை என்ற ஒருநாள் நம் மக்களுக்கு மிகப்பெரிய வரமான நாள். வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், இறைச்சி, மீன், காய்கனி, மளிகை கடைகளுக்கும் பொன்னான நாள். வாரத்தில் கிடைக்கும் அந்த ஒரு ஓய்வுநாள் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்…