கிரிக்கெட்டில் முறையீடு பற்றி அறியுங்கள்

கிரிக்கெட்டில் முறையீடு

கிரிக்கெட்டில் முறையீடு, குறிப்பாளர்கள் பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் அறிந்து கொள்வோம்.

 

1. பந்தடித்தாடும் ஒரு ஆட்டக்காரர் ஆட்டமிழந்தார் (Out) என்று தடுத்தாடும் ஆட்டக்காரர்கள், நடுவரிடம் எப்பொழுது முறையிட வேண்டும்?

அடுத்த பந்து எறிவதற்குமுன் (Next ball delivery) அல்லது ஆட்டம் முடிந்து விட்டது (time) என்று நடுவர் அறிவிக்குமுன், எதிர்க் குழு ஆட்டக்காரர்கள் நடுவரிடம் முறையிட (appeal) வேண்டும். Continue reading “கிரிக்கெட்டில் முறையீடு பற்றி அறியுங்கள்”

கிரிக்கெட் மைதானம் பற்றி அறிந்து கொள்வோம்

கிரிக்கெட் மைதானம்

கிரிக்கெட் மைதானம் பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் அறிந்து கொள்வோம்.

 

1. மைதானம் விளையாடுவதற்கு ஏற்றதல்ல என்பது எந்த அடிப்படையில் கூறப்படுகிறது?

மைதானத்திலே தண்ணீர் தேங்கி இருத்தல்.

மைதானம் அதிக ஈரத்தன்மை உடையதாக இருத்தல்.

பந்தெறியாளர் அல்லது அடித்தாடும் ஆட்டக்காரர்கள் காலை ஊன்றி நிற்க இயலாத அளவுக்குத் தரை வழுக்கல் நிறைந்ததாக இருத்தல்.

தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் எளிதாக இயங்கிட முடியாத அளவு அமைந்திருத்தல்.

மேற்கூறிய காரணங்களால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்று விதிகள் கூறுகின்றன.

Continue reading “கிரிக்கெட் மைதானம் பற்றி அறிந்து கொள்வோம்”

கிரிக்கெட்டில் முறைகேடான ஆட்டம்

கிரிக்கெட்டில் முறைக்கேடான ஆட்டம்

கிரிக்கெட்டில் முறைகேடான ஆட்டம் பற்றிய தகவல்கள் இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

முறைகேடான ஆட்டத்திற்கான விதிமுறைகள்

1. முறைகேடான ஆட்டம் அல்லது தவறான ஆட்டம் (Wrong Play) என்று விதிமுறைகள் எவை எவற்றைக் குறித்துக் காட்டுகின்றன?.

1. நடுவர் தரும் குறிப்புரையை அல்லது அறிவுரையைப் பின்பற்றாமல் அலட்சியம் செய்தல்.

2. நடுவர் எடுக்கும் முடிவுகள் பற்றி குறை சொல்லுதல். Continue reading “கிரிக்கெட்டில் முறைகேடான ஆட்டம்”

கிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்

கிரிக்கெட் போட்டி நடுவர்

கிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள் இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

 

1. ஒருவர் கிரிக்கெட் போட்டி நடுவர் எனத் தகுதி பெற விரும்புகிறார். அவ்வாறு வர விரும்புகிறவருக்கு நடுவருக்குரிய தகுதிகள் என்று என்னென்ன இருக்க வேண்டும்?

கிரிக்கெட் நடுவருக்குரிய கடமைகள், மிகவும் முக்கியமான பொறுப்புக்கள் நிறைந்தவைகளாகும்.

அவர் தனது கடமையை திறம்பட ஆற்ற வேண்டுமானால், அவர் தன்னை முழுதும் தகுதி உள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில குறிப்புக்களைக் கூறுவார்கள்.

கூர்மையான பார்வை, விதிகளை கசடறக் கற்றுத் தெளிந்திருக்கும் ஞானம், நல்ல செவி மடுக்கும் ஆற்றல், ஆட்டத்தில் பற்று, விதிகளைப் பின்பற்றி முடிவெடுக்கும் புத்திக்கூர்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் யாரையும் சார்ந்து நீதி வழங்காத பெருந்தன்மை, ஆழ்ந்து நோக்கி செயல்படுதல் மற்றும் கோபப்படாமல் எதையும் சமாளிக்கும் ஆற்றல் இத்தகைய குணநலன்கள் வாய்ந்தவரே நல்ல நடுவராக விளங்க முடியும்.

Continue reading “கிரிக்கெட் போட்டி நடுவர் பற்றிய தகவல்கள்”

கிரிக்கெட்டில் நிலைப்பந்து (Dead Ball) என்றால் என்ன?

கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன?

கிரிக்கெட்டில் நிலைப்பந்து என்றால் என்ன? என்பது பற்றி இந்த வார கிரிக்கெட் கேள்வி பதில் பகுதியில் தெரிந்து கொள்வோம்.

 

1.ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Bats man) பந்தை உயரமாக அடித்துவிட்டு எதிர் விக்கெட்டை அடைந்துவிடுகிறார். ஆனால் அந்தப் பந்தை எதிர்க் குழுவினர் பிடித்துவிடுகிறார் (Catch). அப்படியானால் என்ன முடிவு எடுக்கலாம்?.

அவர் ஆட்டமிழக்கிறார் (Out). அவர் எடுத்த ஓட்டம் கணக்கில் சேராது. ஏனெனில், அவரே ஆட்டத்தை இழந்துவிட்டிருக்கிற பொழுது, அவர் எடுத்த ஓட்டம் எப்படி கணக்கில் சேரும்? Continue reading “கிரிக்கெட்டில் நிலைப்பந்து (Dead Ball) என்றால் என்ன?”