நீங்கள் வர வேண்டாம்

நீங்கள் வர வேண்டாம்

மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் நீங்கள் வர வேண்டாம் என்பதே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நம்மிடம் விடுக்கும் அன்புக் கட்டளை.

மருந்து இல்லாத நோயான கொரோனாவிற்குப் பயந்து, நாமெல்லாம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றோம்.

ஆனால் நம்முடன் வாழும் தெய்வங்களான மருத்துவர்களும் செவிலியர்களும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நம்மைக் காக்கப் போராடுகின்றார்கள்.

நமக்காக அவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் போது, நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் போராட்டம் எப்படிப் பட்டது? Continue reading “நீங்கள் வர வேண்டாம்”

என்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா?

உதிக்கும் சூரியன்

என்ன செஞ்சு காட்டுனா,

ஓடும் இந்த கொரோனா?

 

முன்னம் ஒரு காலத்திலே

உடுக்கை அடித்து விரட்டினோம் … Continue reading “என்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா?”

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது நீண்ட கால காற்று மாசுபாடானது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் உடல்நல பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மாசுக் காற்றானது நுரையீரல் பாதிப்பு நோய்களை மோசமாக்கும்.

தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. Continue reading “காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்”