சுற்றுலாத் தலங்களைத் திறக்கலாமா?

கன்னியாகுமரி கடற்கரை

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

சுற்றுலாத் தலங்களைத் திறக்கலாமா?

திறக்கக் கூடாது – 53% (8 வாக்குகள்)

திறக்கலாம் – 47% (7 வாக்குகள்)

முகக்கவசம் ‍- சிறுகதை

முகக்கவசம்

நான் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கையில் சட்டென்று அவரைப் பார்த்த போது எனக்கு மிகவும் சங்கடமாகவும் பயமாகவும் இருந்தது. இது இரண்டாவது முறை, நான் அவரிடம் மாட்டிக் கொள்வது.

எதற்கெல்லாம் பயம் கொள்வது என்ற வரையறையே இல்லாது, போயும் போயும் இந்த பக்கத்து வீடு துக்காராம் அங்கிளுக்கு போய் பயப்பட வேண்டியதாய் போயிற்று. அதுவும் பெரிதாய் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய காரணம் ஒன்றும் கிடையாது.

இன்றும் முகக் கவசத்தை மறந்து விட்டேன்; அவ்வளவு தான்.

Continue reading “முகக்கவசம் ‍- சிறுகதை”

காலனான கொரோனா – கவிதை

காலனான கொரோனா

அன்பே நீ வந்தாய் ‍ ஏன் வந்தாய்
ஆசையாய் விளையாடிய பாவலரை
இணையத்தில் மூழ்கடிப்பு செய்தாய் – நீ

உண்ண உணவை இல்லாது செய்தாய் – நீ
ஊரை சுடுகாடாக மாற்றி காலத்தை மாற்றி விட்டாயே – அன்பே

Continue reading “காலனான கொரோனா – கவிதை”

தீ நுண்மி – கவிதை

தீ நுண்மி

செய்யா மாதவம் சகத்தினை யாளுதே
அய்யோ யெனுமொலி செவயினில் கேட்குதே
பொய்யோ இதுவென நினைக்கவும் தூண்டுதே
மெய்யின் நிலையென மெய்களும் காட்டுதே

Continue reading “தீ நுண்மி – கவிதை”