பக்கவாதம் என்னும் பாரிசவாதம்

பக்கவாதம்

பக்கவாதம் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியின் இயக்கங்கள் பாதிக்கப்படும் பிரச்சினை ஆகும்.

நம் உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது மூளையே. அந்த மூளையில் ஒருபகுதி பாதிப்படைவதால், உடலின் ஒரு பக்க உறுப்புக்கள் செயலிழந்து உடலின் இயக்கமானது பாதிக்கப்படுகிறது.

மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கமும், மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் இடது பக்கமும் செயலிழந்து போகிறது. Continue reading “பக்கவாதம் என்னும் பாரிசவாதம்”

கழுத்து இறுக்க நோய்

கழுத்து இறுக்க நோய்

எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம் என்பார்கள். அந்தத் தலையைத் தாங்கிக் கொண்டு நினைத்தபடி இடமும் வலமுமாகவோ, மேலும் கீழுமாகவோ திருப்ப உதவுவது கழுத்து.

கழுத்துப்பகுதி தலையை அச்சாகத் தாங்குகிறது என்றால் அந்த அச்சு திருப்ப முடியாமல் இறுகிப்போனால் என்ன ஆகும்?.

தலை ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து போகும். அந்த வகையிலான பாதிப்பை உண்டாக்கும் நோய்தான் கழுத்து இறுக்க நோய். Continue reading “கழுத்து இறுக்க நோய்”

எலும்புச் சிதைவு நோய் – பெண்களின் எதிரி

எலும்புச் சிதைவு நோய்

எலும்புச் சிதைவு நோய் (Oestioporosis) உலகம் முழுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது.

மனித உடல் கட்டமைப்பிற்கும், மிடுக்கான தோற்றத்திற்கும், உறுதிக்கும் அடிப்படையாக அமைவது எலும்புகள். மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.

இப்படிப்பட்ட எலும்பில் குறைபாடுகளோ அல்லது நோய்த் தாக்கமோ ஏற்பட்டால் உடலின் தன்மையும், தோற்றமும் மாறிவிடும். Continue reading “எலும்புச் சிதைவு நோய் – பெண்களின் எதிரி”

முகவாதம் – முற்றிலும் குணப்படுத்த முடியும்

முகவாதம் மற்றும் சிகிச்சை முறைகள்

முகவாதம் என்பது, மூளையிலிருந்து வரும் முக நரம்பு பாதிப்படைவதால் முகத்தின் ஒரு பகுதி செயலிழந்து போவதாகும்.

இந்த நரம்பு பாதிப்பினால் குறிப்பாக முகத்தசைகள்,கண்ணீர்ச் சுரப்பிகள், உமிழ்நீர்ச்சுரப்பிகள்,உட்செவித்தசைகள், நாக்கின் சுவை மொட்டுக்கள் மிகவும் பாதிப்படைகின்றன.

இதுவும் ஒருவகையான வாத பாதிப்பு என்றாலும் கை மற்றும் கால்களில் ஏற்படும் வாதநோய் போன்று அல்லாமல் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றே.

முகவாதத்திற்கான முக்கிய காரணங்கள் இதுவரை துல்லியமாக கண்டறியப்படவில்லை. Continue reading “முகவாதம் – முற்றிலும் குணப்படுத்த முடியும்”

தசைச்சிதைவு நோய்

தசைச்சிதைவு நோய்

விண்ணை முட்டும் அளவு அறிவியல் வளர்ச்சியை நோக்கி உலகம் அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அத்தகைய அறிவியலுக்கே சவால் விடும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.

உதாரணமாக மருத்துவத்துறையின் வளர்ச்சி  என்பது  பல  கொடிய  நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் சில  நோய்களிடம்  தோல்வியடைந்து கொண்டு வருகின்றது என்பதும்  மறுக்க  முடியாத  உண்மை.

அப்படிப்பட்ட  நோய்களின்  வரிசையில்  குறிப்பிடத்தக்க  நோயாக தசைச்சிதைவு நோய் இருப்பது வருத்தமளிக்கக் கூடியதாகவே  உள்ளது . Continue reading “தசைச்சிதைவு நோய்”