நீயென்ன தவறிழைத்தாய்?
எப்போதும் கூண்டிற்குள் கைதியாய்…
(மேலும்…)புள் விளையாடிய
புல்வெளியை – மானிடன்
கல்கொண்டு வெளியேற்றினான்
இல்கொண்டு விளையாட…
தெருநாய் கூட்டமெல்லாம்
திரளாய் நிற்கிறது
உன்பெயரை சொல்லிக் கொண்டு
உள்ளாட்சி செய்கிறது…
நாள்களின் நகர்வு முன்னோக்கிச் செல்ல
நாகரீக பகிர்வு பின்னோக்கித் தள்ள
வறுமைக் கோட்டில் பயணத்தில் உள்ள
வதைப்படும் மானுடம் வளருமோ மெல்ல…
ரோசா மலரின் உதிரத் துளியை
லேசா உறிஞ்சி அத்தர் செய்து
ராசா மக்கள் நுகர்ந்து வாழ
காசும் பார்க்கும் கனவான் முதலை..