குழிப்பணியாரம் செய்வது எப்படி?

சுவையான குழிப்பணியாரம்

குழிப்பணியாரம் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயார் செய்யப்படுகிறது. இது சிற்றுண்டியாகவும் உண்ணப்படுகிறது. இனிப்புக் குழிப்பணியாரமே பொதுவாக குழிப்பணியாரம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “குழிப்பணியாரம் செய்வது எப்படி?”

கருப்பட்டி இட்லி செய்வது எப்படி?

Idly

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி : 500 கிராம்
உளுந்தம் பருப்பு : 125 கிராம்
கருப்பட்டி : 1 கிலோ கிராம்

 

செய்முறை

அரிசி போடும் அளவிற்கு நாலில் ஒரு பாகம் உளுந்தம்பருப்பு போட வேண்டும். அரிசியை நன்றாகத் தண்ணீர் விட்டு நனைய வைத்து கிரைண்டரில் இட்டு நன்றாக ஆட்டவும்.

உளுந்தம்பருப்பையும் நன்றாக நனைய வைத்து, அதையும் கிரைண்டரில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் ஆட்டவும்.

இரண்டு மாவுகளையும் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். காலையில் மாவில் ¼ ஸ்பூன் சோடா உப்பு, தேங்காய்ப்பூ விருப்பமான அளவு, கருப்பட்டி பால் கெட்டியாகக் காய்ச்சி இலேசான சூடாகவோ அல்லது ஆறவிட்டோ வடிகட்டி மாவில் விட்டுக் கிளறவும்.

இட்லித் தட்டில் வேக வைக்கவும். விருப்பப்படி இனிப்பை குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். சுவையான கருப்பட்டி இட்லி தயார்.

இந்த மாவை இளஞ்சூட்டில் தோசையாக எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுடலாம்.

 

தண்ணீர் ஒரு மாமருந்து

தண்ணீர்

தண்ணீர் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும்  ஒரு மாமருந்து. போதிய தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலம் பராமரிப்பும் பாதுகாப்பும் பெறுகிறது. நீர் நரம்பு மண்டலத்தை முறையாக இயங்கச் செய்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது. Continue reading “தண்ணீர் ஒரு மாமருந்து”

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள் வளரும்.
தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும்.
மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும்.
வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது.

 

நல்ல உணவுப் பழக்கம்

Fresh_vegetables

உங்கள் உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?

காப்பி, டீ குடிக்காதீர்கள். தேவைப்பட்டால் சுக்கு காப்பி, நீராகாரம், மோர் அருந்துங்கள். Continue reading “நல்ல உணவுப் பழக்கம்”