Tag: சிற்றுண்டி

  • உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி?

    உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி?

    உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. வீட்டிற்கு திடீர் விருந்தினர் வருகையின் போது இதனை செய்து அசத்தலாம்.

    இதற்கு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். இனி உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

    (மேலும்…)
  • நெய் கடலை செய்வது எப்படி?

    நெய் கடலை செய்வது எப்படி?

    நெய் கடலை அருமையான சிற்றுண்டி வகை ஆகும். இதனை மாலை நேரங்களில் தேநீருடன் ருசிக்கலாம். கடலைப் பருப்பினைக் கொண்டு செய்யப்படுவதால் இது பசி தாங்கும். வீட்டில் இதனை தயார் செய்வது ஆரோக்கியமானதும் கூட.

    இதனைத் தயார் செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இனி சுவையான நெய் கடலை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

    (மேலும்…)
  • வாழைத்தண்டு 65 செய்வது எப்படி?

    வாழைத்தண்டு 65 செய்வது எப்படி?

    வாழைத்தண்டு 65 வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி, எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட எல்லா வகையான சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமானது. (மேலும்…)

  • சோள குழிப்பணியாரம் செய்வது எப்படி?

    சோள குழிப்பணியாரம் செய்வது எப்படி?

    சோள குழிப்பணியாரம் அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாக கொடுத்து அனுப்பலாம்.

    இது உண்பதற்கு மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். சிறுதானிய வகையான சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

    என்னுடைய சிறுவயதில் எங்கள் ஊரில் கடைகளிலும், தெருக்களிலும் சோள குழிபணியாரத்தை விற்பனை செய்வார்கள்.

    குழிப்பணியாரம் எண்ணெயை குறைவாக பயன்படுத்தி தயார் செய்யப்படுவதால் இது ஆரோக்கியமானதும் கூட.

    இனி சுவையான சோளக் குழிப்பணியாரம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)

  • புழுங்கல் அரிசி புட்டு செய்வது எப்படி?

    புழுங்கல் அரிசி புட்டு செய்வது எப்படி?

    புழுங்கல் அரிசி புட்டு அருமையான சிற்றுண்டி ஆகும். இது உண்பதற்கு மிகவும் மென்மையாக இருக்கும்.

    எங்கள் பாட்டி வீட்டிற்கு நாங்கள் சிறுவயதில் விருந்தினர்களாகச் செல்லும் போது, இதனை செய்து உண்ணக் கொடுப்பார்கள். (மேலும்…)