பிறைசூடி பெருமானே அருளாளா ஓவியம்
வரைந்தவர்: R.அக்சயா
இளையான்குடி மாற நாயனார் வறுமையிலும் விதை நெல்லைக் கொண்டு, சிவனடியாருக்கு அமுதளிக்க முற்பட்ட வேளாளர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் உழவுத் தொழில் செய்து வந்தார். உழவுத் தொழிலைச் செய்பவர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர்.
(மேலும்…)உமையம்மையின் சந்தேகம், அதன் மூலம் நாம் அடையும் ஞானம் பற்றிய ஒரு சிறுகதை.
கையிலாயத்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். அவருடைய அருகில் இருந்த உமையம்மை அவரிடம் “ஐயனே, எனக்கு ஒரு சந்தேகம்” என்றார்.
“கேள்” என்றார் சிவபெருமான்.
அம்மை ஆரம்பித்தார். (மேலும்…)
வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. (மேலும்…)
சமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது. (மேலும்…)