என்ன புண்ணியம் செய்தேனோ?

நடராஜர்

என்ன புண்ணியம் செய்தேனோ?
அம்பலத்தய்யனை – தில்லை
அம்பலத்தய்யனைக் கண் குளிரக் காண
என்ன புண்ணியம் செய்தேனோ?

Continue reading “என்ன புண்ணியம் செய்தேனோ?”

ஆன்மீகத் தகவல்கள்

பஞ்சாயதன மூர்த்தங்கள்

பாணலிங்கம் – சிவன்

ஸ்வர்ண ரேகாசிலா – அம்பிகை

சாளக்ரமம் – மகா விஷ்ணு

ஸ்படிகம் – சூரியன்

சோணபத்ரம் – விநாயகர்

Continue reading “ஆன்மீகத் தகவல்கள்”

காசி – ஒப்பில்லாப் புனித நகரம்

காசி - புனித நகரம்

‘இறப்பு’ என்பது எல்லோரும் விரும்பாத ஒன்று. மரணத்தை பொதுவாக யாரும் விரும்புவதில்லை; கொண்டாடுவதும் இல்லை. ஆனால் உலகிலேயே இறப்பைக் கொண்டாடும் நகரம் காசி மட்டுமே.

ஆலயங்களில் கூட்டம்; மருத்துவமனைகளில் கூட்டம்; ஜோதிடர்களிடம் கூட்டம். இப்படி எல்லா கூட்டங்களிலும் உள்ள மக்களின் நோக்கம், மரணத்தை தள்ளி வைத்துவிட்டு நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.

ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்தான் காசி நகரம்.

Continue reading “காசி – ஒப்பில்லாப் புனித நகரம்”

காரைக்கால் அம்மையார் – எப்போதும் இறையடியில் பாடும் பேறு பெற்றவர்

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் எப்போதும் இறைவனின் திருவடியின் அருகில் இருந்து அவரைப் பாடும் அரும்பேற்றினைப் பெற்றவர். இறையருளால் மாய மாங்கனியை இருமுறை பெற்றவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூன்று பெண் நாயன்மார்கள் அடங்குவர். அவர்கள் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆவர். இம்மூவருள்ளும் காரைக்கால் அம்மையாரே மூத்தவர்.

சிவாலயங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை வைத்திருப்பதைக் காணலாம். அவர்களுள் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த கோலத்திலும் ஏனையோர் நின்ற கோலத்திலும் அருளுவர்.

Continue reading “காரைக்கால் அம்மையார் – எப்போதும் இறையடியில் பாடும் பேறு பெற்றவர்”

இளையான்குடி மாற நாயனார் – வறுமையிலும் பக்தி

இளையான்குடி மாற நாயனார்

இளையான்குடி மாற நாயனார் வறுமையிலும் விதை நெல்லைக் கொண்டு, சிவனடியாருக்கு அமுதளிக்க முற்பட்ட வேளாளர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் உழவுத் தொழில் செய்து வந்தார். உழவுத் தொழிலைச் செய்பவர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர்.

Continue reading “இளையான்குடி மாற நாயனார் – வறுமையிலும் பக்தி”