ஊதாக்கலர் சுருக்குப்பை – 2

ஊதாக்கலர் சுருக்குப்பை - 1

வயதான தேகம் பலமின்றி நடுங்கியது. சற்று நிதானித்து நின்றுவிட்டு குனிந்து கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டுக் கிளம்ப
யத்தனித்தாள்.

அவளை தடுக்கும் விதமாய் கூடையிலிருந்து பழத்தை எடுத்த அந்த ஆண் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கொஞ்சமாய் உடலை மேலே எழுப்பி கைகளைத் தூக்கி கிழவியின் பலமற்ற இடுப்பில் இருந்த கூடையை ‘வெடுக்’கெனப் பற்றி இழுத்தான்.

Continue reading “ஊதாக்கலர் சுருக்குப்பை – 2”

ஊதாக்கலர் சுருக்குப்பை – 1

ஊதாக்கலர் சுருக்குப்பை - 1

வேணியம்மா திரிசூலம் ரெயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு அவசர அவசரமாய் நடைமேடைக்கு வந்தார்.

ஆனாலும் அவர் ஏறவேண்டிய திருமால்பூர் செல்லும் மின்சார ரயில் வண்டி கிளம்பி சற்றுதூரத்தில் சென்று கொண்டிருப்பது கண்ணில்பட்டது.

Continue reading “ஊதாக்கலர் சுருக்குப்பை – 1”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம் 26

அந்த அறையில் மெல்ல சுற்றிக் கொண்டிருந்த சீலிங் ஃபேன் சீரான காற்றை பரப்பிக் கொண்டிருக்க, சுவரோரம் கிடந்த கட்டிலில் எலும்பும் தோலுமாய் படுத்துக் கிடந்தார் எழுபத்தி நான்கு வயது முதியவர்.

கண்கள் மூடியிருக்க மார்பு மட்டும் லேசாய் மேலும் கீழும் ஏறி இறங்கி அவர் உயிரோடிருப்பதை உறுதி செய்து கொண்டிருந்தது.

அவ்வப்போது நினைவு வருவதும், அப்படி நினைவு வரும்போதெல்லாம் உதடுகள் எதோ சொல்வதுபோல் அசைவதும் சட்டென நினைவு தப்பிப் போவதுமாய் கடந்த ஒன்னரை மாதமாக இப்படியான நிலைதான்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 25

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம்-23

தாயை இழந்து காதலையும் இழந்து நடைபிணம் போல் ஆகியிருந்தான் ராகவ்.

நாகர்கோயிலில் தஞ்சமடைந்தவன் அலுவலகம் செல்வதும் தங்கியிருக்கும் இருப்பிடத்துக்கு வருவதுமாய் எந்திரகதியில் இயங்கினான்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 25”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24

ஆயிற்று பார்வதி மாமி இறந்து இன்று ஆறாம் நாள். வேரறுந்த மரம் போல் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை.

தலையில் எண்ணை தடவாததால் பரட்டைத் தலையுமாய் ஷேவிங் செய்யாததால் முள் முள்ளாய் தாடியும் மீசையுமாய் ஒடுங்கிப் போய் தளர்வாய் அமர்ந்திருந்தான் ராகவ்.

அடிக்கடி மார்பு குலுங்கியது. கட்டுப்பாடின்றி கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. மாமாவும் அத்தையும் பெயருக்குத் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24”