“அம்மா, நீ ஏன் பாஸ் ஆனாய்?” என்றாள் நான்கு வயது மலர் தன் தாய் மங்கையை மலங்க பார்த்தபடி.
“ஏன்டா, என் கன்னுக்குட்டி? நீ என்ன சொல்ற. அம்மாக்கு புரியல.” Continue reading “ஏன் பாஸ் ஆனாய்? – சிறுகதை”
இணைய இதழ்
“அம்மா, நீ ஏன் பாஸ் ஆனாய்?” என்றாள் நான்கு வயது மலர் தன் தாய் மங்கையை மலங்க பார்த்தபடி.
“ஏன்டா, என் கன்னுக்குட்டி? நீ என்ன சொல்ற. அம்மாக்கு புரியல.” Continue reading “ஏன் பாஸ் ஆனாய்? – சிறுகதை”
“நிலா சோறு, அப்படினா என்னம்மா?” என்றாள் மூன்று வயது மகள் வாணி, தன் தாய் ரமாவிடம்.
“என்ன, திடீருன்னு நிலா சோறு பத்தி கேட்க?”
“இல்லம்மா பக்கத்து வீட்டு பரணி, சித்ரா பௌர்ணமிக்கு நிலா சோறு சாப்பிடப் போறதா எங்ககிட்ட சொன்னான். அதான் பாப்பா அதப்பத்தி கேட்கா.” என்றான் ஐந்து வயது ரமணி.
“சித்திரை மாசம் பௌர்ணமி அன்னைக்கு இரவு, எல்லோரும் வீட்ல வட பாயசத்தோட விருந்து சமைச்சு மொட்ட மாடியில, ஆத்தங்கரையில, வீட்டு முத்தத்துலன்னு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதத்தான் நிலா சோறுன்னு சொல்லுவாங்க.
வர்ற சித்திரா பௌர்ணமிக்கு, நம்ம வீட்ல எல்லாரும் மொட்ட மாடியில நிலா சோறு சாப்பிடுவோம் சரியா?” என்றாள் ரமா.
ரமா கூறியதைக் கேட்டதும் குழந்தைகள் இருவரும் “ஹே ஜாலி, ஜாலி” என்று குதித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின்பு கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்து, பின்னர் அங்கேயே வேலை வாங்கி, கல்யாணத்திற்குப் பின்பும் சென்னையிலேயே செட்டிலாகி விட்டவள் ரமா.
நிலா சோறு என்ற வார்த்தையைக் கேட்டதும், அவளுக்கு ஊரில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சாப்பிட்ட நிலா சோறு நினைவிற்கு வந்தது. வித்தியசமான நிகழ்வு அது.
சென்னையில் யாருக்கும் அப்படியொரு நிலா சோறு சாப்பிட்ட அனுபவம் இருக்காது என்ற பெருமிதத்தோடு, பழைய நினைவுகளில் மூழ்கினாள் ரமா. Continue reading “நிலா சோறு – கிராமத்து சிறுகதை”
வாழ்க்கையில் எல்லாமே அனுபவம்தான் என்பதை, தொலைந்து கிடைத்த லேப்டாப் கதை விளக்குகிறது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு, அவசர அவசரமாக வந்தாள் நிலா.
பேருந்தில் ஏறியதும் தன்னிடமிருந்த லேப்டாப் பையினை, தன் தலைக்கு மேலே பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு, பர்ஸினை மடியில் வைத்துக் கொண்டாள்.
பேருந்தில் மொத்தத்தில் ஐந்தாறு நபர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
வாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.
அன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.
கைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.
மார்கழி மாதத்து பூசணிக்காய் என்ற இக்கதை, பொது இடத்தில் உள்ள பூசணிக்கொடியில் காய்த்திருக்கும் பூசணிக்காயை கைப்பற்ற நினைக்கும் மக்கள் பற்றியது.
பூசணிக்காய் அவர்களுக்கு கிடைத்ததா என்பதை அறிய, கதையைப் படியுங்கள். Continue reading “மார்கழி மாதத்து பூசணிக்காய்”