டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி?

டிசம்பர் பூக்கள்

டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி என்பது ஒரு நாடோடிக் கதை.

டிசம்பர் மாதத்தில் வைலட், இளம்சிவப்பு, வெள்ளை, வெள்ளையில் வைலட் நிறவரிகள் என பலவண்ணங்களில் பூக்கள் பூக்கின்றன.

இப்பூக்கள் பெண்கள் பலராலும் விரும்பி தலையில் சூடிக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்பூக்கள் மணத்தினைக் கொண்டிருப்பதில்லை.

டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி என்பதனைத் தெரிந்து கொள்ள  இக்கதையைப் படியுங்கள். Continue reading “டிசம்பர் பூக்கள் வந்தது எப்படி?”

மௌனத்தின் பலன்

மௌனத்தின் பலன்

சில நேரங்களில் மௌனம் சிறந்த பலன்களைக் கொடுக்கும். தடுமாறும் தருணத்தில் மௌனத்தின் பலன் எவ்வாறு இருந்தது? என்பதை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.

பொறுமை இல்லாத செயல் நமக்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்பதையும் இந்நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “மௌனத்தின் பலன்”

அதிசய தேன் – சிறுகதை

அதிசய தேன்

இடம், பொருள், ஏவல் குறித்து எப்போதும் பேச வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவர். அதனை விளக்கும் கதைதான் அதிசய தேன். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேகேய தேசம் என்றொரு நாடு இருந்தது. அந்நாட்டை வீரவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்நாட்டின் அரசவைக்கு ஒருநாள் மலை தேசத்திலிருந்து ஒருவன் வந்தான்.

அவன் கையில் தேன் குடுவையை வைத்திருந்தான். அவனைப் பார்த்ததும் அரசவையிலிருந்த அமைச்சர் ஜெயவீரனுக்கு எரிச்சல் வந்தது. Continue reading “அதிசய தேன் – சிறுகதை”

அறிவு தந்த வெகுமதி

அறிவு தந்த வெகுமதி

அறிவு என்றைக்கும் நன்மையைத் தரும் என்பதை அறிவு தந்த வெகுமதி என்ற இந்தக் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

விதர்ப்ப நாட்டில் மாறன் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அன்பு மற்றும் புத்திசாமர்த்தியம்; உடையவன்.

ஒருநாள் திடீரென அறிவிப்பு ஒன்று வந்தது. விதர்ப்பநாட்டின் இளவரசியை பூதம் ஒன்று தூக்கி காட்டுக்குள் சென்று விட்டது.

பூதத்திடமிருந்து இளவரசியை மீட்பவருக்கு இளவரசியை திருமணம் செய்து அந்நாட்டின் வருங்கால அரசனாக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. Continue reading “அறிவு தந்த வெகுமதி”

அரசின் பரிசு – சிறுகதை

அரசின் பரிசு

“கவர்மண்டு அறிவிச்ச பொங்கல் பரிச நாளைக்கு நம்ம கூப்பங் கடைல குடுங்காங்களாம். நான் இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு வரிசைக்கு போப்போறேன். நீ வர்யா செல்லம்மா?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

“நாளைக்கு காலையில அம்மாவ பாக்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குப் போகனும். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு, தொடஞ்சு எடுத்திட்டு வரனும். நீ எனக்கும் சேர்த்து வரிசையப் போட்டுரு. நான் வந்து உங்கூட சேர்ந்துக்குறேன்.” என்றாள் செல்லம்மா. Continue reading “அரசின் பரிசு – சிறுகதை”