மணமக்களுக்கான ஊன்றுகோல்

மணமக்களுக்கான ஊன்றுகோல்

மணமக்களுக்கான ஊன்றுகோல் என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறிய அறவுரைகளில் முதலாவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

மணமகனுக்கும் மணமகளுக்கும் நாளையிலிருந்து மாமியார் வீடு புதிது.

உடுத்துகின்ற உடையெல்லாம் புதிது.

உண்ணுகின்ற உணவெல்லாம் புதிது.

படுக்கின்ற இடமெல்லாம் புதிது. Continue reading “மணமக்களுக்கான ஊன்றுகோல்”

மணமக்களுக்கு – கி.ஆ.பெ.விசுவநாதம்

மணமக்களுக்கு

மணமக்களுக்கு என்ற இக்கட்டுரை முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் எழுதிய‌ மணமக்களுக்கு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

மணமக்கள் தங்கள் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை கி.ஆ.பெ.விசுவநாதம் விளக்கியுள்ளார்.

தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே! வணக்கம். எல்லோருடைய நல்லெண்ணப்படியும், வாழ்த்துதற்படியும், இன்று இங்குத் தமிழ்த் திருமணம் நடைபெறுகிறது.

நாமனைவரும் சான்று கூறவும், வாழ்த்துக் கூறவும் கூடியுள்ளோம். Continue reading “மணமக்களுக்கு – கி.ஆ.பெ.விசுவநாதம்”

தாயே. . . தமிழே. . .

தமிழ்த்தாய்

தாயே. . .  தமிழே. . .

உன் சீரிளமைத் திறம்பாட. . . .

ஆயிரம் ஆயிரம் பக்கங்கள்

எழுதித் தீர்த்த பின்பும்

திருத்தமாய் ஒரு வார்த்தையேனும் கிடைக்காமல்

மீண்டும் மீண்டும்

ஆயிரம் ஆயிரம் பக்கங்களாய். . . .

ஆயிரமாயிரம் யுகங்களாய். . .

சுகன்யா முத்துச்சாமி
முதுகலை தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
அய்யப்பநாயக்கன்பேட்டை
அரியலூர் மாவட்டம்

சுதந்திரக் கூச்சல்

சுதந்திர கூச்சல்

‘சுதந்திரக் கூச்சல்’ என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

பயிற்சி மொழி, ‘தமிழா, ஆங்கிலமா?’ என்ற சிக்கலில் உரிமைப் பிரச்சனை ஒன்றும் எழுப்பப்படுகின்றது.

பயிற்சிமொழி எது? என்பதில் இறுதியாக முடிவு எடுக்கும் உரிமை அல்லது பொறுப்பு, பல்கலைக்கழகத்தினுடையதா? அரசாங்கத்தினுடையதா? என்பதே அந்தப் பிரச்சினை. Continue reading “சுதந்திரக் கூச்சல்”

பொது மொழி எது?

மொழிகள்

பொது மொழி எது? என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

இந்தியாவில் அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப் பெற்ற பதினான்கு மொழிகளில், உருது மற்றும் சமஸ்கிருதம் நீங்கலாக ‘அரசு மொழி’ என்ற சிறப்புக்குரியவை பன்னிரண்டு மொழிகளாகும். Continue reading “பொது மொழி எது?”