ஆண்டாளின் பாசுரத்தை
அனுதினமும் அனுபவிப்போம்
நன்மை சேருமடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி
ஆனந்தம் பொங்கிட கும்மியடி
ஆண்டாளின் பேரைச் சொல்லியடி
ஆடிப்பாடி ஒன்று கூடியடி
குழலினிது யாழினிது!
குழலினிது யாழினிது செவிக்கு இன்பம்
குழலூதும் யாதவனே தெவிட்டா அமுதம்
உயர்வோங்கும் வாழ்வே!
நாரணன் பாதங்கள் இருள் நீக்கும் – நம்பி
பாராயணம் செய்வோர்க்கு மருள் நீங்கும் – எண்ணி
காரணன் பணிந்தோர்க்கு பயமில்லை – சொல்லும்
நாவாலே உயர்வோங்கும் தாழ்வில்லை வாழ்வே !
கண்ணன் ராதை காதல்…
கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…
ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…