வள்ளிமலை முருகன் கோவில்

வள்ளிமலை முருகன் கோவில்

வள்ளிமலை முருகன் கோவில் பற்றிய‌ இக்கட்டுரை கலைமாமணி மு.தொ.பாஸ்கர தொண்டைமான் அவர்கள் எழுதிய‌ வேங்கடம் முதல் குமரி வரை (பாலாற்றின் மருங்கிலே) என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

சென்ற சில வருஷங்களுக்கு முன் நான் பூனா நகரத்துக்குப் போயிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தங்கினேன்.

ஒருநாள் காலை, அங்குள்ள தமிழ் அன்பர்கள் சிலரோடு நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள பார்வதி மலையில் உள்ள கோயில்களைப் பார்க்கச் சென்றேன். என் மனைவியும் உடன் வந்திருந்தாள்.
Continue reading “வள்ளிமலை முருகன் கோவில்”

சோளிங்கர் யோக நரசிம்மர்

சோளிங்கர் யோக நரசிம்மர்

சோளிங்கர் யோக நரசிம்மர் பற்றிய‌ இக்கட்டுரை கலைமாமணி மு.தொ.பாஸ்கர தொண்டைமான் அவர்கள் எழுதிய‌ வேங்கடம் முதல் குமரி வரை (பாலாற்றின் மருங்கிலே) என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரத்தில் நரசிம்ம அவதாரம் ஒன்று. மற்ற அவதாரங்களைவிடப் பார்ப்பவர் உள்ளங்களில் அச்சத்தை விளைவிக்கும் பயங்கரமான அவதாரம் அது.

மனித உடலும் சிங்க முகமுமாக இருக்கும் உருவம்.

ஆதலால் பார்ப்பதற்கே அஞ்சுவோம் நாம்.

உபாசிப்பதற்கோ துணிவு வராது நமக்கு.

பக்தன் பிரகலாதனுக்காக, இரணியனைச் சம்ஹரிக்கத் தூணைப் பிளந்து கொண்டு உதித்த மூர்த்தி, இரணியன் உடலைக் கிழித்து உதிரம் குடிக்கும் நிலையில், காண்போர் அஞ்சி நிலைகுலைவதில் அதிசயம் இல்லைதானே? Continue reading “சோளிங்கர் யோக நரசிம்மர்”

திருத்தணி குமரன் – அமைதியான வாழ்வு அருள்பவன்

திருத்தணி குமரன்

திருத்தணி குமரன் என்ற இக்கட்டுரை கலைமாமணி மு.தொ.பாஸ்கர தொண்டைமான் அவர்கள் எழுதிய‌ வேங்கடம் முதல் குமரி வரை (பாலாற்றின் மருங்கிலே) என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

அருணகிரியார் பிறந்து வளர்ந்து முருகன் அருள் பெற்றுப் பாடத் துவங்கியது, அண்ணாமலையிலே.

‘எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே, எந்தை நினது அருள் புகழை இயம்பிடல் வேண்டும்!’ என்று பிரார்த்திக்கிறார்.

அண்ணாமலையிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகக் கடந்து, முருகன் கோயில் கொண்டிருக்கும் தலம் தலமாகச் சென்று, குன்று குன்றாக ஏறித் திருப்புகழ் பாடி மகிழ்ந்தவர் அவர்.

இப்படிப் பலதலங்களுக்கும் சென்றவர்,  திருவண்ணாமலைக்குப் பக்கத்திலே சுமார் அறுபது மைல் தூரத்திலுள்ள‌ திருத்தணிகைக்குச் சென்று, அங்குக் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானைக் கண்டு, அவன் புகழ்பாடப் பலவருட காலமாக வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கிறார்.

Continue reading “திருத்தணி குமரன் – அமைதியான வாழ்வு அருள்பவன்”

காளத்தி அப்பர் தொண்டர் கண்ணப்பர்

காளத்தி அப்பர்

‘இறைவனிடத்து இடையறா அன்பு செலுத்திய நாயன்மார்கள் அறுபத்து மூவரில், செயற்கரிய செயல் செய்தார் யார்?’ என்பது ஒரு பட்டி மண்டபத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட பொருள்.

அறுபத்து மூன்று அன்பர்களது செயலையும் அலசி ஆராய்வது சிரமம் என்று கருதிப், பட்டினத்தார் குறிப்பிடும் மூன்று திருத்தொண்டர்களை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர்.

வாளால் மகவு அரிந்து ஊட்ட

வல்லேன் அல்லன்: மாதுசொன்ன

சூளால் இளமை துறக்க வல்லேன்

அல்லன்: தொண்டு செய்து

நாள் ஆறில் கண் இடந்து அப்ப

வல்லேன் அல்லன்: நான் இனிச்சென்று

ஆளாவது எப்படியோதிருக்

காளத்தி அப்பருக்கே?

என்று சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் மூவரையும் போல, அரிய செயல் செய்து இறைவன் அருளைப் பெறத் தம்மால் இயல வில்லையே என்று ஏங்கி இருக்கிறார் பட்டினத்தார். Continue reading “காளத்தி அப்பர் தொண்டர் கண்ணப்பர்”

வடவேங்கடவன் என்ற திருப்பதி சாமி

வடவேங்கடவன் என்ற திருப்பதி

திருப்பதி சாமி பற்றிய‌ வடவேங்கடவன் என்ற இக்கட்டுரை கலைமாமணி மு.தொ.பாஸ்கர தொண்டைமான் அவர்கள் எழுதிய‌ வேங்கடம் முதல் குமரி வரை (பாலாற்றின் மருங்கிலே) என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஒரு ஊமை இப்படி நான்கு பேர்கள் ஒரு மலை ஏறுகிறார்கள். மலை என்றால் ஏதோ இமயத்தின் சிகரத்தைப் போன்று நீண்டு உயர்ந்த மலை அல்ல. சின்னஞ்சிறிய மலைதான்.

அந்த மலைமீது ஒரு கோயில். அந்தக் கோயிலிலே ஒரு தெய்வம். அந்த தெய்வத்திடம் அசையாத நம்பிக்கை மக்களுக்கு; கேட்கும் வரத்தையெல்லாம் அளிக்க வல்லது என்று. Continue reading “வடவேங்கடவன் என்ற திருப்பதி சாமி”